ஓவியம் Ravi Palette
பிரபல தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் உடல்நலக்குறைவால் நேற்று இரவு சென்னையில் மரணடைந்தார். அவரது மறைவுக்கு இலக்கியவாதிகள் பலரும் தங்கள் கண்ணீராஞ்சலியை செலுத்திவருகின்றனர். அவர்களில் சிலரின் கண்ணீர்ப் பதிவுகள் இங்கே....கவிக்கோ அப்துல்ரகுமான்>தமிழ்க்கவிதை உலகில் தனித்தன்மை கொண்டவராகத் திகழ்ந்தவர் ஞானக்கூத்தன். புதுக்கவிதையை மரபில் எழுதியவர் அவர். அது தமிழில் புதுமையானது.‘எனக்கும் தமிழ்தான் மூச்சு"
ஆனால்;அதைப் பிறர்மேல் விடமாட்டேன்;-என்பதுபோன்ற கவிதைகள், அவருடைய பாணியை வெளிப்படுத்தக் கூடியவை. தமிழ்ப் புதுகவிதை வரலாற்றில், ஞானக்கூத்தனுக்கு முக்கியமான இடம் உண்டு. அவருடைய மறைவு தமிழ்க்கவிதை உலகில் ஒரு சோக நிகழ்ச்சி.
கவிஞர் மு.மேத்தா; ;அன்புலும் நட்பிலும் இணைந்து கலந்து பழகியவர் கவிஞர் ஞானக்கூத்தன். புதுக்கவிதையை மரபு வடிவத்தில் எழுதும், புத்தம் புதுப் புதுமையைப் புகுத்தியவர் . கல்கத்தா தமிழ்ச்சங்க விழாவில் ஒருவாரம் அவரோடு கலந்துகொண்டபோது, இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த அந்த அன்பான நினைவுகள் என் மனதை நனைக்கின்றன. கருத்தில் வேறுபாடு இருக்கலாம். இதயத்தில் வேறுபாடு ஏது? அன்பை அடைக்கும் தாழ்ப்பாள்கள் இல்லை. ஞானக்கூத்தன் என்னும் தலைநிமிர்ந்த தமிழ்க்கவிஞன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டான் என்பதை நினைக்கும் போது, என் கண்களும் எழுதுகோலும் கலங்கிக் கண்ணீர் விடுகின்றன. என் அனுதாப அஞ்சலியைத் தமிழ் அன்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆரூர் தமிழ்நாடன்>தமிழ்க்கவிதை வெளியில் நவீனச் சிறகு விரித்த மரபுப் பறவை, தன் பறத்தலை நிறுத்திப் பறந்துவிட்டது. அந்த ஞானப்பறவைக்கு, நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
கவிஞர் ஜலாலுதீன்;அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவர் ஞானக்கூத்தன். அதிர்ந்து பேசாமல், தன் கவிதைகளால் நம் இதயங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர். அவரோடு கடற்கரை மணலில் கவிபாடிய நாட்கள், பரிதவிப்பை ஏற்படுத்துகின்றன. தமிழிலக்கிய உலகம் ஒரு மாபெரும் கவிஞனை இழந்திருக்கிறது. நக்கீரன்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக