வெள்ளி, 29 ஜூலை, 2016

கபாலி 4000 டிக்கெட்டுகளை தாணுவிடம் வாங்கிய வைரமுத்து.. பிளாக் டிக்கெட் வியாபாரமும் செய்கிறாரோ?

 vairamuthu watch kabali with bharathirajaசென்னை: கபாலியை பார்க்காமலேயே விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜவுடன் முதல் முறையாக கபாலி படத்தை பார்த்துள்ளார் கபாலி தோல்விப் படம் என வைரமுத்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கபாலி படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வைரமுத்து இப்படி பேசுவதாக கபாலி படத் தயாரிப்பாளர் தாணு பதிலடி கொடுத்திருந்தார். கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்திருந்தனர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களிலும் வைரமுத்துக்கு எதிராக கடும் எதிர்ப்புகளையும் பதிவு செய்திருந்தனர் ரஜினி ரசிகர்கள்.

இதையடுத்து இச்சர்ச்சை குறித்து வைரமுத்து ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில் என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது; கபாலி வெற்றி தோல்வின்னு பேச நினைத்தேன் ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம்...அதை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், 'நான் 'கபாலி' படத்தை பார்க்கணும்' என்று ரஜினியிடம், வைரமுத்து போனில் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நுங்கம்பாக்கம் ஃப்ரிவ்யூ தியேட்டரில் முதல்முறையாக கபாலி படம் பார்த்தார் வைரமுத்து. இவ்வளவு சர்ச்சைக்கு அப்புறமும் அவர் சிரித்தபடி படம் பார்த்தாராம். அவருடன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் படம் பார்த்தார்.
முன்னதாக தாணு கூறுகையில், கபாலியை தோல்விப் படம் எனும் இவர்தான், அந்தப் படத்துக்கு முதல் நாளில் 4000 டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றார். ஒரு நயா பைசா நான் வாங்கவில்லை... யார் என்ன சொன்னாலும் கபாலி வெற்றியைத் தடுக்க முடிந்ததா.. அது மாபெரும் வெற்றிப் படம். மக்கள் தந்துள்ள வரவேற்பு மலைக்க வைக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி என்று கூறியிருந்தார். தற்போது வேறு வழியின்றி அந்த பணத்தைத் தந்தாராம் வைரமுத்து  //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: