
கிருஷ்ணகிரி
அருகே சூளகிரி அடுத்து உள்ள சுண்டகிரியில் கன்டெய்னர் லாரி தனியார்
பேருந்து மீது மோதியதில் 12 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டவர்கள்
காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி தனியார் பேருந்து இன்று மதியம் 2.30
மணியளவில் சென்று கொண்டிருந்தது. சூளகிரி அருகே சுண்டகிரியில் வளைவில்
திரும்பிய போது, கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி
பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 12 பயணிகள் சம்பவ
இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்தவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா, சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தேவையான அனைத்து உதவிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக