புது டில்லி:"கடந்த 2004 லோக்சபா தேர்தலில் டில்லியின் சாந்தினி சௌக்
தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட
வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள், இதர ஆவணங்களை எவ்வளவு
தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை'என டில்லி நீதிமன்றத்தில் தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.எனினும் இதுதொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையத்தின்
இணையதளத்தில் உள்ளது என்று ஆணையம் தெரிவித்தது.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி, கடந்த 2004, 2011, 2014 ஆகிய
ஆண்டுகளில்
நடைபெற்ற லோக்சபாதேர்தல்களையொட்டி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில்
தனது கல்வித் தகுதி குறித்து தவறான தகவல்களை குறிப்பிட்டதாகக் கூறி, டில்லி
நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த
2004ஆம் ஆண்டு சாந்தினி சௌக் லோக்சபாதொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி
இரானி உள்ளிட்ட வேட்பாளர்கள் சமர்ப்பித்த உண்மையான ஆவணங்களை நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது... அட்ரா அட்ரா அட்ரா மோடி மந்திரி சபை மொத்தமே டுபாக்கூர்கள்தான் .. சதுரங்க வேட்டை ஆட்சியிலே குஜராத்திகள் கொள்ளையோ கொள்ளை
அதனடிப்படையில், நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹர்விந்தர் சிங் முன் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரமொன்றை சனிக்கிழமை(நேற்று)தாக்கல் செய்தது. அதில், "2004 லோக்சபா
தேர்தலில் சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த உண்மையான பிரமாணப் பத்திரங்கள், இதர ஆவணங்களை எவ்வளவோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அதன் விவரங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இந்த விவகாரம் குறித்த அடுத்தக்கட்ட விசாரணையை, வரும் 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக