செவ்வாய், 26 ஜூலை, 2016

தமிழிசையும் பிரேமலதாவும் பேசினாங்க... நீயும் பொம்மை நானும் பொம்மை .

கடந்த 13ஆம் தேதி, தேமுதிக அலுவலகத்தில் நடந்த உரையாடல்பற்றி நான் சொல்லியிருக்கிறேன். அதை ஒருமுறை நினைவூட்டுகிறேன். 'பிஜேபி எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க?’ என்று கேட்டிருக்கிறார் சுதீஷ். ’சட்டமன்றத் தேர்தல் சமயத்துல நாம
வருவோம்னு அவங்க ரொம்பவும் எதிர்பார்த்தாங்க. பல வழிகள்ல பேசிப் பார்த்தாங்க. நாமதான் வேண்டாம்னு சொல்லிட்டோம். இப்போ பேசினா சரியா வருமா?’ என்று சொன்னாராம் விஜயகாந்த். ‘நீங்க பேசவேண்டாம். நாங்க பேசிப் பார்க்கிறோம். அவங்களும் கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாத்தானே இருக்காங்க...’ என்று சொல்ல... விஜயகாந்த், ‘பேசுங்க..’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆக, பிஜேபி-யை கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர காய்நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டார் சுதீஷ்.

தமிழிசை மூலமாகவே பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என நினைக்கிறார் சுதீஷ். இன்னும் ஒருசில நாட்களில் அதற்கான வேலைகள் தொடங்கும் என்று சொல்கிறார்கள்' என்பதுதான் அப்போது சொன்ன தகவல்.
நிற்க.
பிஜேபி-யின் தமிழ் மாநிலத் தலைவராக தமிழிசை பொறுப்பேற்கும்வரை, பிரேமலதாவுடன் பிஜேபி-யில் இருந்து பேசிய ஒரே நபர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும்தான். தமிழிசை, தமிழகத் தலைவரானதும் பிரேமலதாவை தேடிப்போய் பேச ஆரம்பித்தார். சாலிகிராமத்தில் தமிழிசை வீடு இருப்பது லோகய்யா நாயுடு காலனியில். விஜயகாந்த் வீடு இருப்பது கண்ணபிரான் காலனியில். ஒரே ஏரியாவில் வீடு என்பது தமிழிசைக்கு வசதியாகப் போனது. அதிகாரபூர்வ சந்திப்பு சிலமுறை நடந்தாலும், அடிக்கடி நடந்தது பெர்சனல் சந்திப்பு. ‘நாம ஒண்ணா இருக்கலாம் அக்கா!’ என்று அடிக்கடி உருகினார் தமிழிசை. அந்த நேரத்தில் பிரேமலதா பிஜேபி-யை விரும்ப முக்கியக் காரணமே தமிழிசைதான். ஆனால், தமிழிசை எதிர்பார்த்த எதுவும் அப்போது நடக்கவில்லை. தற்போது, தேமுதிக-வின் பார்வை பிஜேபி பக்கம் திரும்பியிருப்பதால், மீண்டும் அது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டனர். கடந்த சனிக்கிழமை இரவு பிரேமலதாவும், சுதீஷூம் லோகய்யா நாயுடு காலனியில் உள்ள தமிழிசை வீட்டுக்குப் போனார்களாம்.
பிரேமலதாதான் முதலில் பேச ஆரம்பித்திருக்கிறார். ’சட்டமன்றத் தேர்தலில் நீங்க கூப்பிட்டும் எங்களால் உங்களோடு வர முடியவில்லை. எங்களோட சூழ்நிலை அப்படி. நீங்க எதுவும் தவறாக நினைக்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் நாங்க தனித்துப் போட்டியிடலாம் என்றுதான் மக்கள் நலக் கூட்டணியைவிட்டு விலகிட்டோம். ஏற்கெனவே, நீங்களும் கேட்டதால் உள்ளாட்சித் தேர்தலில் நாம கூட்டணிவைத்துப் போட்டியிடலாம் என நான் நினைக்கிறேன்.’ என்று சொன்னாராம்.
‘நான் எப்பவும் உங்களை என்னோட சகோதரியாகத்தான் நினைக்கிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதுபற்றி, நான் டெல்லியில் உள்ள தலைவர்களுடன் பேசுறேன். தேவைப்பட்டால் அவர்கள் சென்னை வரும்போது சந்திக்கவும் ஏற்பாடு செய்யுறேன்’ என்று சொல்லியிருக்கிறார் தமிழிசை. ’நீங்க எல்லாத்தையும் இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்குவீங்கன்னு நான் நினைக்கலை. தயக்கத்துடன்தான் நான் உங்களைப் பார்க்கவே வந்தேன்!’ என்று பிரேமலதா சொன்னாராம்.
அதற்கு தமிழிசை, ‘இதுல என்னக்கா இருக்கு... டெல்லியில் உள்ளவர்களிடம் நீங்க கேட்ட மாதிரி வேண்டாம்... நானே சொல்றமாதிரி சொல்றேன். அவங்ககிட்ட அனுமதி வாங்கிட்டு, அதுக்குப்பிறகு நான் வந்து உங்களோடு பேசுறமாதிரி பேசுறேன். அதுதான் சரியா இருக்கும்!’ என்று வழியும் சொல்லியிருக்கிறார். ‘நீங்க எப்படி சொல்றீங்களோ... அப்படியே செஞ்சிடலாம்!’என்று பிரேமலதா மறுபடியும் சொன்னாராம். இதுபற்றி கேப்டன்கிட்ட பேசிட்டீங்களா.. அவருக்கு சம்மதம்தானே?’ என்று தமிழிசை கேட்க... சுதீஷ் பதிலைச் சொல்லியிருக்கிறார். ‘’அவருகிட்ட சொல்லிட்டுதான் வந்தோம். அவங்க கூப்பிட்டபோது நாம போகலை. இப்போ போய்க் கேட்கிறது எப்படி சரியா வரும்? என்று அவர் கொஞ்சம் தயக்கத்துடன்தான் இருந்தாரு. நாங்கதான் பேசிப் பார்க்கிறோம்னு வந்தோம். அதனால அவருக்கு பரிபூரண சம்மதம்தான்!’ என்றாராம். இப்படியாக, பேசி முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். தமிழிசையின் முயற்சியால், பிஜேபி-யின் தமிழகப் பொறுப்பாளர்கள் விரைவில் சென்னை வரலாம். விஜயகாந்த்தை சந்திக்கலாம்.” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது.
சைன் இன் ஆகியிருந்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை தயாராக வைத்திருந்தது. ''பட்ஜெட்மீதான பொது விவாதம் இன்று சட்டப்பேரவையில் தொடங்கியது. கடந்த வியாழன் அன்று நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ரொம்பவும் சோர்வாக இருந்தார் முதல்வர் ஜெயலலிதா. சபையில் இருந்த பெரும்பான்மையான நேரம் கண்களை மூடியே அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததையும் டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருக்கிறோம். இன்று ஜெயலலிதா முகத்தில் சோர்வு இல்லை. கருணாநிதி பெயரை குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சை வந்தபோது அதை உன்னிப்பாகக் கவனித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்ய மாட்டோம் எனச் சொன்ன திமுக-வினர், முதல் நாளே வெளிநடப்பு செய்தனர். சபை நிகழ்வுகள் ஒருபக்கம் போய்க்கொண்டே இருந்தாலும், இன்னொருபக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் குறித்த விபரங்கள் முதல்வருக்குப் போய்க்கொண்டே இருந்தது. ' எதுவும் பிரச்னை இல்லையே...' என்று கேட்டிருக்கிறார். சென்னை போலீஸ் கமிஷனருடன் பேசி, அப்டேட் தகவல்களை முதல்வருக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் எதுவும் சொல்லவில்லையாம்" என்ற ஸ்டேட்ஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. அதற்கு லைக் கொடுத்த கையோடு மெசேஜ் ஒன்றையும் அனுப்பியது  minnambalam.com

கருத்துகள் இல்லை: