வெள்ளி, 29 ஜூலை, 2016

சுவாதி தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்தாரா? அதிர்ச்சி செய்திகள் டிவி பேட்டியில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி


தமிழ் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட நிகிழ்ச்சி ஒன்றில் சுவாதியை ஒரு குழுவினர் பல்வேறு சட்டவிரோத செயலில் ஈடுபட உபயோகித்தனர் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஏதாவது சட்டவிரோத செயலில் ஈடுபட்டார்களா, இளைஞர்களை மூளைசலவை செய்யும் கும்பல், தீவிரவாதிகள் நாட்டின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தியிருக்கலாம் என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி சந்தேகத்தை எழுப்புகிறார். சுவாதியின் மடிக்கணினி உள்ளவற்றை பார்த்தால் தான் இவற்றை உறுதிப்படுத்த முடியும் என கூறுகிறார் வழக்கறிஞர்.
மேலும், பெங்களூரில் சுவாதி பணிபுரிந்த போது தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகொள்வதற்காக ஒரு மென்பொருளை திருடிக்கொண்டு வரும்படி அந்த குழுவினர் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.


சுவாதியின் அதீத கணினி அறிவை தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்த அவர்கள் முயன்றார்கள் எனவும் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். வேறு வழியின்றி அந்த மென்பொருளை அவர் திருடிக்கொண்டு வந்த பிறகு தான் சுவாதிக்கு அந்த நிறுவனத்தோடு பெரும் பிரச்சனை வந்திருக்கிறது. அதன் காரணமாகவே சுவாதி பெங்களூரில் இருந்து சென்னை வந்திருக்கிறார்.

அதன் பின்னணியில் விரியும் பல முக்கிய தகவல்கள் பதிவிட முடியாத அளவுக்கு அதன் பின்புலம் பெரிதாக விரிந்து கிடக்கிறது என்கிறார்கள். தங்கள் கணினியில் இருந்து தொடர்பு கொண்டால் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்து விடக்கூடும் என்பதால் இந்து பெண்ணான சுவாதியின் கணினியில் இருந்து சில தகவல்களை அவர்கள் சர்வதேச அளவில் பரவியிருக்கும் பயங்கரவாத அமைப்பிற்கு பரிமாறிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அதனாலேயே சுவாதியின் மடிக்கணினி மற்றும் மொபைல் தகவல்களை சொல்ல காவல்துறை மறுக்கின்றனர் என்கிறார்கள். மேலும் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த, ஆதரவு தெரிவித்த நபர்களை சுவாதியின் கணினியில் இருந்த தகவலை வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரி சென்னை வந்து இந்த தகவல்களை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த கொலையில் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு சம்மந்தப்பட்டிருக்கிறது. இந்த கொலைக்கு பின்னர் தான் ஒரு சில தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. ஒரு மாநிலத்தில் சில குடும்பங்களே காணாமல் போனதாக தகவல்கள் வருகின்றன.

சுவாதியின் மடிக்கணினியில் இருந்து பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன. அவர்களை கூண்டோடு பிடிக்கவே காவல்துறை தகவல்களை மறைக்கின்றனர் என கூறப்படுகிறது.

தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வெளியான இந்த தகவல்கள் சுவாதி கொலை வழக்கை தொடர்ந்து கவனித்து வரும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: