சென்னை: கபாலி படத்தின் மலாய் வெர்ஷன் 400 திரையரங்குகளில் இன்று
ரிலீஸ் செய்யப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ்
உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
கபாலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்தவாரம்
வெள்ளிக்கிழமை ரிலீசானது.தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் 'கபாலி'
படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தமிழ்நாட்டில்
திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரும்பாலானவை 'ஹவுஸ்புல்' காட்சிகளாக
ஓடிக்கொண்டிருக்கின்றன.
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கும் இப்படம், தொடர்ந்து நல்ல
வசூலைத் தந்து வருகிறது. உலகம் முழுவதும் ஒரே நாளில் கபாலி வெளியிடப்படும்
என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கபாலி படத்தின் மலாய் வெர்ஷன் நாளை
வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், கபாலி திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய
தயாரிப்பாளர் தாணு, கபாலி படத்தின் மலாய் வெர்ஷன் நாளை ரிலீஸ் செய்யப்பட
உள்ளது. மலேசியாவில் உள்ள 400 தியேட்டர்களில் கபாலி நாளை ரிலீஸ்
செய்யப்படுகிறது. விரைவில் சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் ரிலீஸ்
செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Read more a//tamil.oneindia.com
Read more a//tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக