தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாய் இரண்டாயிரம் பேர் குழுமியிருந்தனர். பெரியாரை வரவேற்று திரு.வே.காளிமுத்து பேசினார். பெரியாருக்கு திரு.சி.திருவேங்கடம் கங்காணி மாலை அணிவித்தார். பெரியாரின் பெரும்பணியைப் பாராட்டி திரு.கி.நடேசன் வரபேற்பிதழ் வாசித்தளித்தார். கூட்டத்திற்கு, திரு.ஆ.சுப்பையா தலைமை வகித்தார்.
<>1947ல் -இல் பெரியாரை அழைப்பதற்காக காப்பார் தமிழ் மக்கள் வசூலித்த 214 வெள்ளி (மலேசிய கரன்சி) 15 காசையும் திரு.முனியாண்டி, பெரியாரிடம் ஒப்படைத்தார். புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத் தொழிலாளர்கள் 60 வெள்ளி பண முடிப்பை கொடுத்தனர். 6 வயது சிறுவன் ஒருவனும் 3 வயதி சிறுமி ஒருத்தியும் தாங்கள் சேர்த்து வைத்த காசை பண முடிச்சாக்கி பெரியார் தாத்தாவிடம் கொண்டு வந்து கொடுத்தனர். சிறுவர்கள் இருவரிடமும் கொஞ்சிப் பேசி தம் அன்பைத் தெரிவித்தார் பெரியார். >பாடுபடுகிற தோட்டத் தொழிலாளியைக் கண்டு பரவசமுற்ற பெரியார் தொடர்ந்து பேசுகையில் சொன்னார்: நான் மலாயாவில் இதுவரை சுற்றியதில் அதிகாரிகளையும் , மந்திரிகளையும் செல்வர்களையும் பார்த்தேன்! அவர்களிடையே பேசினேன். ஆனால், என் சொல்லினால் ஏதாவது பயன் ஏற்படுமானால் அது உங்களிடம்தான் ஏற்படும் . உங்களிடம் தான் ஏற்பட வேண்டும். ஏனெனில் சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ளவர்கள் உயர வேண்டும். படியாதவர்களாக- பாமரர்களாக இருக்கிறவர்கள் நிலை திருந்த வேண்டும் என்பதுதானே என்னுடைய லட்சியம். >சமுதாயத்தில் மாறுதல் வேண்டுபவர்கள் நீங்கள்தான். பணக்காரனுக்கு மாறுதல் என்றால் அது அவனுடைய பணம் பெருகுவதாக இருக்கும். ஆனால் 8 மணி நேரமும் 10 மணி நேரமும் பாடுபட்டு வயிற்றுச் சோற்றுக்கே இழுபறியாக இருக்கும் உங்கள் நிலையில் தான் பெருத்த மாறுதல் ஏற்பட வேண்டும். நாளெல்லாம் பாடுபட்டு கிடைக்கிற வரும்படி சோற்றுக்குத்தான் ஆகும். மீதியிருந்தால் கள்ளுகடை, மிச்சமிருந்தால் நாசமாய்ப்போன சாமிகளுக்கு அழுவது என்ற போக்கில் மாறுதல் காண வேண்டும். ">நான் சாமி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கற்பனைக் கடவுள்கள் நம்மைப் பாப்பராக்கிவிடுகின்றனவே என்றுதான் நொந்து கொள்கிறேன்.">கடவுளிடம் பக்தி செலுத்துங்கள், அன்பு செலுத்துங்கள், கடவுளுக்கு பயப்படுங்கள். வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. கடவுள் மனிதர்களாக இருக்கிறார்; நடமாடும் ஜீவன்களாக இருக்கிறார்; நீங்கள் மனிதர்களிடம் , உங்களிடம் காட்டுகின்ற அன்பை கடவுள் இருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்.">தொழிலாளி மகன் தொழிலாளியாக, தொழிலாளி பேரன் தொழிலாளியாக இருக்கலாகாது. இருக்க கூடாது என்று இடித்துரைத்தார். பண்டிகைகள் என்று நீங்கள் பாழாக்குகிற பணத்தை மகனின் படிப்புக்குச் செலவிடுங்கள், உருப்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக