பெங்களூர்: ஜாமீன் கிடைக்காத தகவல் அறிந்ததும் சிறையில்
ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு
சிறை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.
ஹைகோர்ட்டில் நடைபெற்ற ஜாமீன் மனு விசாரணையை, சிறையில் இருந்தபடி ஜெயலலிதா
தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தார். கன்னட செய்தி
தொலைக்காட்சி சேனலில் அவர் செய்திகளை கவனித்தபடி இருந்தார். அப்போது
சசிகலா, இளவரசி ஆகியோருக்கும்கன்னட செய்திகளில் கூறப்படும் தகவல்களை மொழி
மாற்றம் செய்து தெரிவித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.மதியம் கோர்ட்டில் சாப்பாடு இடைவேளை விடப்பட்டதும், ஜெயலலிதாவும்
சாப்பிட்டுள்ளார். ஆனால் பரபரப்புடனே காணப்பட்டார். இதனிடையே மாலை 4
மணியளவில் நீதிபதி தீர்ப்பு தனது உத்தரவை அளித்ததையும் தொலைக்காட்சி செய்தி
வழியாக ஜெயலலிதா அறிந்துகொண்டார். இதையடுத்து ரத்த கொதிப்பு சற்று
அதிகரித்ததாக கூறப்படுகிறது.
மயங்கும் நிலைக்கு சென்ற அவருக்கு சிறை மருத்துவர்கள் உடனடியாக அவசர
சிகிச்சையளித்தனர். இதன்பிறகு உடல் நலம் தேறியுள்ளது. அதே நேரம் எப்போது
வேண்டுமானாலும் சிறைக்கு வெளியே தனியார் மருத்துவமனையில் அவருக்கு
சிகிச்சையளிக்கவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக