K.J.yesudas: women "should not wear jeans and trouble others". The 74-year-old reportedly
said: "You should dress modestly and do not behave like men. People
would be tempted to pay attention to what's beyond it... Don't do it to
attract and make others do the undesirable."
பெண்கள்
ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறிய பிரபல பின்னனி
பாடகர் யேசுதாஸ் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.கேரள
மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காந்தி
ஜெயந்தி விழாவில் பேசிய யேசுதாஸ், பெண்கள் ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து
அடுத்தவர்களுக்கு தொல்லை தரக் கூடாது. இதுபோன்ற உடைகள் எளிமையையும்,
அன்பையும், பெண்களின் உயர்ந்த குணங்களாகக் கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கும்
எதிரானது என்று குறிப்பிட்டிருந்தார் இந்தப்
பேச்சுக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
மகிளா காங்கிரசை சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் யேசுதாஸ் மீது திருவனந்தபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.யேசுதாஸ் கூறியுள்ளது ஏற்கத்தக்கது அல்ல. இது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். யேசுதாஸ் மிகப்பெரும் பாடகர். இசைத் துறையில் அவரது பங்களிப்பு குறித்து இந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்கிறோம். அப்படிப்பட்ட ஒருவர், பெண்களுக்கு எதிராக பேசியிருப்பது துரதிருஷ்டவசமானது' என்று மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக