ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசுப் பதவிகளை
வகிப்பதற்கு, குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி
தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக, முகமது அலி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு அரசுப் பதவிகள் வழங்குவதற்கு முன் குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் இருந்து ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு அரசுப் பதவிகளை வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அரசுகள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்துவிட்டு, அவர்களது ஒப்புதலையும் பெற வேண்டும் என்ற விதிமுறையை நிர்ணயிக்க வேண்டும்.
நீதித் துறையின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக இத்தகைய உத்தரவை அவசியம் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு அரசுப் பதவியை அளிப்பதற்கு முன்பாக, குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக