வியாழன், 9 அக்டோபர், 2014

பவானி சிங் : மனசாட்சி படி நடந்தேன் ! அந்த ஒரு மணி நேர மனமாற்றம் குறித்து கருத்து ! பயமா ? பணமா ?

பெங்களூரு: ''ஜெயலலிதா, ஜாமின் மனு விசாரணையில், மனசாட்சிப்படி நடந்து கொண்டேன்; கடமையை சரியாக செய்த நிறைவு எனக்குள்ளது,'' என, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறினார்.
கடந்த 7ம் தேதி, ஜெயலலிதா ஜாமின் மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீது, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பிலான வழக்கறிஞர்கள் வாதம் முடிந்த பின், அரசு தரப்பில் பவானி சிங் ஆட்சேபனை தெரிவித்து வாதிடுவார் என்று, அனைவரும் எதிர்பார்த்தனர். நீதிபதி சந்திரசேகரா, அரசு வழக்கறிஞரை வாதாட அழைத்தார். அப்போது பவானி சிங், ''ஜாமின் மனுவுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என்றார். இவரது பேச்சு விமர்சனத்துக்கு உள்ளானது.  Sir....நீங்கள் சொல்றது சரி .ஆனால் காலையில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு மாலையில் எதிர்ப்பு தெரிவிக்காமல் போனது தான் அவரின் ஜாமீனுக்கு நீங்கள் வைத்த ஆப்பு...அல்லது நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்திருந்தால் நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்க மாட்டார்...அந்த ஒரு மணிநேர மன மாற்றம் லேசுப்பட்டதல்ல ?

இது தொடர்பாக, 'தினமலர்' நிருபரிடம் அவர் கூறியதாவது: யாரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை. என் கடமையை செய்தேன். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உள்ளேன். அக்., 1ம் தேதி எதிர்ப்பு தெரிவித்து, 7ம் தேதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று, சிலர் கூறுகின்றனர். அன்றைய சூழ்நிலை வேறு; 7ம் தேதி சூழ்நிலை வேறு. ஜாமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது, யாருடைய நிர்பந்தத்தின் பேரிலும் அல்ல. நானாக எடுத்த முடிவு. சட்டம் பற்றி தெரியாதவர்கள் தான், இது பற்றி விமர்சனம் செய்கின்றனர். அதைப் பற்றி, கவலைப்படவில்லை. தண்டனை ரத்து மற்றும் தற்காலிக தடை கோரிய மனுவுக்கு, எதிர்ப்பு ஆகியவற்றை தெரிவித்து உள்ளேன். இவ்வாறு, பவானிசிங் கூறினார். dinamalar.

கருத்துகள் இல்லை: