வியாழன், 9 அக்டோபர், 2014

சொத்துகுவிப்பு ! பொங்கி எழுந்த சமுக வலைத்தளங்கள் ! கிளிசரின் கோஷ்டியை அடித்து நொறுக்கும் Social media ?

ரெண்டு பேரு வாதத்தை மட்டுமே கேட்டு, யாரு சிறப்பா வாதாடுறாங்களோ அவங்களுக்கு சார்பா தீர்ப்பு சொல்றதுக்கு இது என்ன சாலமன் பாப்பைய்யா தலைமையில் நடக்குற பட்டிமன்றமாய்யா? நீதிபதிக்குன்னு எந்த சொந்த கருத்தோ, நீதியை நிலைநாட்ட வேண்டிய தார்மீக கடமையோ இல்லையா? அரசு வக்கீல் ஆட்சேபிக்கலைன்னா, நீதிபதிகள் ஏன் எதுக்குன்னு யோசிக்க கூடாதா? என்ன நடந்துகிட்டு இருக்குன்னு புரிஞ்சிக்க மாட்டாங்களா? நீதிபதிகள் என்ன மம்மிஜி கட்சிகாரனுங்க மாதிரி கூமுட்டைகளா? வக்கீல்ன்ற பேருல ஒரு பொறம்போக்கு சொல்லுது ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தலைன்னு’ அப்ப என்ன ..றதுக்கு 35 வயசான ஒரு ‘பச்சை குழந்தையை’ மம்மிஜி தத்தெடுத்தாங்களாம்? இன்னொருத்தன் ‘அந்த திருமணத்திற்கு பல கோடி செலவழிக்க பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு’ வாதாடுறான். அவனை எதால அடிக்கிறது? ஒட்டுமொத்த நாடே பாத்து வாய் பொளந்து நின்னுச்சே.. எவன் அப்பன் வீட்டு காசுல இந்த ஆர்ப்பாட்டம் பண்றானுங்கன்னு கேட்டுச்சே.. கோடிக்கணக்கான பேரு இங்க பிச்சை எடுத்து இருக்குரானுங்க, அவனுங்க வயித்துல அடிச்சு ஆடம்பரம் பண்றீங்கலேடான்னு நாடே காரித்துப்புச்சே.. அது இந்த பொ.போ. வக்கீலுக்கு தெரியாதா? இதையெல்லாம் கேட்டுகிட்டு குற்றவாளிகள் நாலு பேரும் ‘உத்தம புத்திரர்கள்.. பத்தரை மாற்று தங்கங்கள்னு.. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்னு’ கூவறதுக்கு நீதிபதிகள் என்ன இவனுங்க கட்சிகாரனுங்களை மாதிரி மூளை மழுங்கடிக்க பட்ட ஆயுட்கால அடிமைகளா?   தினமலர் வாசகர்களின்  காரசாரமான கருத்துக்கள் social media 
 1, சிறிய ஒரு வெள்ளைக்காரனின் படை எப்படி மிகப்பெரும் இந்திய மக்களை ஆட்சி செய்தது என்ற கேள்விக்கு பதில் இப்பொழுது ஜெயலலிதாவின் கைது மூலம் கிடைத்துள்ளது. அன்று வெள்ளை காரன் நம்மளை ஆட்சி செய்கிறான் என்ற உண்மையே நம் முன்னோர்களுக்கு தெரியாமல் இருந்தது.
அதை அவர்களுக்கு விளக்கி புரியவைக்கவே பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இருந்தும் ஒரு சிலரே புரிந்து கொண்டு வெள்ளையனை எதிர்த்தார்கள். அவர்கள் போதிய ஆதரவின்றி வெள்ளை காரனால் கொல்லப்பட்டார்கள். இதே போல் தான் இன்றைய நெலைமை உள்ளது. இன்று நம்மை ஆட்சி செய்பவர்கள் பெரும் கொள்ளையர்கள் என்ற எண்ணமே நம் மக்களிடம் இல்லை
2  சுதாகரன் பெரிய தொழில் அதிபர்.” – இதை கேட்டு ஜெயா கூட அவ்வளவு சோகத்திலேயும் வாய் விட்டு சிரித்து இருப்பார்.
3  பொய் வழக்கு என்றால்…அதை எதிர்க்கும் வல்லமை உங்கள் அம்மாவுக்கு இல்லையா ? 18 வருடங்கள் பொய் வழக்கை பார்த்தா 160 வாய்தா வாங்கினார் ? பொய் வழக்கை சந்திக்கும் திராணி இல்லையா ? ஒரு முதல்வரால் ஒரு பொய் வழக்கை எதிர்க்க முடியவில்லை என்றால்….ஒரு சராசரி குடிமகன் நிலை ? 18 வருடம் இழுத்தடித்து விட்டு இப்போது வயது ஆகிவிட்டது ஜாமீன் வேண்டும் என்று மனு……ஆக இறுதி வரை பொய் வழக்கு என்று சொல்லி கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் …

4  லாலு அவர்கள் ..ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு பற்றி கிண்டலாக வட நாட்டு செய்தி சானலுக்கு அளித்த பேட்டியில்….ஜெயலலிதா வைத்துள்ள ரூபாய் 42 லட்சம் மதிப்புள்ள 750 ஜோடி செருப்பின் மதிப்பு தான் என் சொத்தின் மதிப்பு என்று கூறினார்…அப்போது கடுங்கோபம் கொண்ட ஜெயலலிதா….. இன்று அதே லாலு வழக்கை மேற்கோள் காட்டி ஜாமீனுக்கு கையேந்தி நிற்கும் பரிதாப நிலையில்….
5  இவுங்க வழக்கையும் காப்பாத்திக்க தெரியலை , அப்பன் சுப்பனுக்கெல்லாம் கிடைக்கிற ஜாமீனும் வாங்க தெரியலை ….இவுங்கதான் காவிரிக்காகவும் , முல்லை பெரியாருக்கும் வாதிட்டு காவிரியையும் , முல்லை பெரியாரையும் மீட்டு தந்தாங்களாம் , இதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு…இந்த கேசை எப்படி அன்பழகன் திறம்பட நடத்தினாரோ அதேபோல தான் காவேரியிலும் , முல்லை பெரியாரிலும் நீதி மன்றங்களில் திமுக ஒரு அஸ்திவாரத்தை உருவாக்கி வைத்தது… காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாயுடுச்சி..

6  பெங்களூருல பல்பு வாங்கினது பத்தாதா… டில்லிக்கு வேற போய் வாங்கனுமா … எதுக்கு இந்த அவசரம்… அங்கயும் வாங்குனா… அப்புறம் 4 வருஷம் கண்டிப்பா கம்பி எண்ணனும்… பதறுன காரியம் செதரிரும்… சொன்னா கேளுங்க…. நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு முறுக்கிக்கிட்டு நின்னீங்கன்னா…மொத்தமா நக்கிட்டு போயிரும்… இல்லை அங்கபோயும் பல்பு வாங்குவேன் என்ன பந்தயம் ன்னு கேட்டீங்கன்னா…. ஒன்னும் பண்ண முடியாது…best of luck…

7  தமிழக மக்களின் போராட்டத்தைப் பார்த்து கர்நாடக நீதிமன்றம் மிரண்டுபோய் தீர்ப்பு வழங்கியதாக குண்டு கல்யாணம் பெரிய சவுண்ட் விட்டார்…பெண்கள் குத்தாட்டம் போட்டனர்… கடேசியில் எல்லாம் புஸ்ஸாகி விட்டது… அதிக ஆட்டம் அந்த ஆண்டவனுக்கே தாங்கமுடியலை.. அதான் ஜாமீன் கிடைக்கவில்லை…மகிழ்ச்சிக்கு எவ்வளவு ரேட் ? சோகத்துக்கு எவ்வளவு ரேட் ?

8  சுதர்சன ஓமம் நடத்தி்யதன் பலன் சூப்பர்  சாபம் குடுக்குறதுக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டாங்களே… அடிச்சாம் பாருயா அப்பாயின்மென்ட் ஆடர….. சூப்பர் டர்னிங் பாய்ன்ட்…. இதுக்கு தான் ஓவரா ஆட்டம் போட கூடாதுன்னு சொல்றது பஞ்சு மணி……. கூன்பாண்டிகள் இனி என்ன என்ன கூத்தெல்லாம் செய்யப்போரனுகளோ காமெடி ட்ரெக்லையே போனா பரவாயில்ல இனி சுப்ரீம் கோர்ட்டுல அப்பீல் பண்ணி விசாரணை வரைக்கும் செம ஜோக்க இருக்கும்

 
ஜெயாவின் முதல் ஆட்சியில் துவங்கி இன்று வரை போயஸ் தோட்டத்தின் கோயாபல்ஸ்சாக ‘தொண்டு’ செய்து வருகிறது தினமலர். தற்போது மோடிக்கும் அதை அளித்து வருகிறது. மக்களின் நாடித்துடிப்பிற்கு எதிராக பொய்யுரைக்கும் தினமலரின் கைங்கைரியத்தில் அதன் வாசகர்கள் பலர் ராமசுப்பையர் உருவாக்க நினைத்த ராமராஜ்ஜியத்திற்கு எதிரான அறிவையும், உத்வேகத்தையும் பெற்றுவிட்டனர். தினமலரின் எதிர்மறை எழுத்து வாசகர்களிடம் நேர்மறை விளைவைத்தான் தோற்றுவித்திருக்கிறது. அந்த விதத்தில் தினமலர் தோற்று விட்டது.
இங்கே ஜெயா கைது குறித்து தினமலர் இணைய தளத்தின் செய்திகளில் மறுமொழியிட்ட வாசகர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம். பாசிச ஜெயாவிற்கு எதிராக தமிழ் மக்கள் புத்தாக்கத்துடன் பேசும் இந்த கருத்துக்கள் ஒரு விதத்தில் கவிதையாகவும் இருக்கின்றன.
-    வினவு

கருத்துகள் இல்லை: