புதன், 8 அக்டோபர், 2014

தீபிகா படுகோன் : பெண்ணின் மார்பகங்களைப்பற்றியோ, ஆணுறுப்பைக் குறித்தோ பிரசாரம் செய்யக்கூடாது.

ரஜினியுடன் 'கோச்சடையான்' படத்தில் ஜோடி சேர்ந்த நடிகை தீபிகா படுகோனே, சமீபத்தில் 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்கிடமான வார்த்தைகளுடன் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
'ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார் என்பதற்கான ஒரே அடையாளம் அவர் 'ஆமாம்' என்று சொல்வதாகவே அமைந்திருக்கிறது' என்பதே அந்த கடிதத்தின் தொடக்கம்.
ஆங்கில நாளேடு ஒன்றின் இணையதள பதிப்பில் தீபிகா படுகோனேயின் கவர்ச்சிப்படம் ஒன்றை கவர்ச்சியாக தலைப்பிட்டு வெளியிட்டதால், பாவம் இவர் கொந்தளித்துப்போய் விட்டார். இது தொடர்பாக விளக்கம் அளித்துத்தான் அவர் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். ]
கடிதத்தின் சாராம்சம் இதுதான்-
'ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார் என்பதற்கான ஒரே அடையாளம் அவர் 'ஆமாம்' என்று சொல்வதாகவே அமைந்திருக்கிறது' என்ற வாசகங்களுடன் நான் இதை எழுதுவதற்கு காரணம் உண்டு.


நாம் மாற்றங்களை காண்பதற்கு, தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். சமத்துவமின்மை, கற்பழிப்பு, பயம், வலி இல்லாத ஒரு சந்தோஷமான உலகத்தை நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டும் என்று இந்த சமூகம் எண்ணுகிறது.

நான் என் நடிப்புத்தொழிலில் ஒன்றும் தெரியாத அப்பாவி இல்லை. இந்தத் துறையில் பல்வேறு கோரிக்கைகள் வைப்பது உண்டு. உச்சி முதல் பாதம் வரை நான் மூடிக்கொண்டவாறு உடை அணியும் அவசியம் ஒரு பாத்திரத்துக்கு தேவைப்படலாம் அல்லது முழு நிர்வாணமாக நடிப்பதும் ஒரு பாத்திரத்துக்கு தேவைப்படலாம்.
அதை தேர்ந்தெடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். இது படத்திற்கான வேஷம்தான். நிழல்தான். நிஜமல்ல என புரிந்து கொள்ளுங்கள்.

நான் ஏற்றுள்ள வேஷம் எதுவாக இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு நடித்துத்தர வேண்டும்.

ஆனால், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும், அதிகாரம் வழங்க வேண்டும் என்று நாங்கள் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில், வாசகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் கவர வேண்டும் என்பதற்காக தீவிரமான  ஒரு உத்தியை  இன்னும் சிலர் பின்பற்றி வருகிறார்கள். இதற்கு எதிராக நான் பேசி வந்திருக்கிறேன்.

ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமுதாயத்தில் ஒரு பெண் முன்னேறுகிறபோது, அதற்கு கைதட்டி பாராட்டவேண்டிய நேரம் இது.

ஆனால் நிழல் வாழ்க்கை, நிஜ வாழ்க்கை என்னும் இரண்டுக்கும் இடையே நாங்கள் சிக்கி மங்கிப்போகிறோம். எங்கள் முயற்சிகள் நீர்த்துப்போகின்றன.
எனது உடலை கொண்டாடுவதில் எனக்கு பிரச்சினை இல்லை.

எனது பாத்திரத்தை திரையில் எந்த வகையில் காட்டுவதற்கும் நான் வெட்கப்பட்டு ஓடுவதில்லை.

உள்ளபடியே சொல்வதென்றால், எனது அடுத்த படத்தில் எனது பாத்திரம், 'பார்' நடன அழகி பாத்திரம்தான்.

உங்களுடனான எனது பிரச்சினை, ஒரு நிஜ மனுசியை பொருளாக்கி பிரசாரம் செய்வதுதான்.

ஏற்று நடிக்கும் பாத்திரத்தை பிரசாரம் செய்வதில் அல்ல.

நீங்கள் விரும்பினால் நிச்சயம் எனது பாத்திரத்தை வேண்டுமானால் கூறு போடுங்கள்.

நான் சொல்வதெல்லாம், திரைக்கு வெளியே  பெண் மதிக்கப்படவேண்டும்.

பெண்ணின் மார்பகங்களைப்பற்றியோ, ஆணுறுப்பைக் குறித்தோ, இன்ன பிற உடல் பாகங்களைக் குறித்தோ பிரசாரம் செய்யக்கூடாது.

என்னைப் பொறுத்தமட்டில் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருகிறது...

இப்படி போய் முடிகிறது கடிதம். dalilythanthi.com

கருத்துகள் இல்லை: