பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீ்ன் இல்லை என்று முடிவாகி
விட்ட நிலையில் அடுத்து உச்சநீதிமன்றத்தை ஜெயலலிதா தரப்பு நாடவுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்துப் பணிகளும் உடனடியாக
முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஜெயலலிதா தரப்புடன் விவாதித்துவி்ட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று
வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியும் அறிவித்துள்ளார்.
அனேகமாக நாளையே மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2 முறை தள்ளி வைக்கப்பட்டு இன்று ஜெயலலிதா
உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுக்களும் விசாரணைக்கு வந்தன. எல்லாமே
ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருப்பது போலவே தோன்றியது. அரசு வழக்கறிஞர் பவானி
சிங்கும் கூட ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்றும்
கூறியிருந்தார்.
ஆனால் நீதிபதி அதிரடியாக ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து வி்ட்டார். இதனால்
ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்து
உச்சநீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும். அந்த வேலையை ஜெயலலிதா தரப்பு
வழக்கறிஞர்கள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக