புதன், 8 அக்டோபர், 2014

குற்றவாளியே போலீசாக வந்தான் ! கொன்றாள் ! பாலியல் தொழிலில் தள்ளிய போலீசை ஆண்டுகளின் பின் கொன்று பழி தீர்த்த மும்பை பெண் !



மும்பை: பாலியல் தொழிலில் தன்னை வலுக்கட்டாயமாகத் தள்ளி, தன் வாழ்க்கையைக் குலைத்த போலீஸ்காரர் ஒருவரை 12 ஆண்டுகளுக்குப் பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் மும்பைப் பெண் ஒருவர். பீகாரைச் சேர்ந்த அப்பெண் கடந்த 2002ம் ஆண்டு தனது 17 வயதில் சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ரயில் மூலமாக பீகாரிலிருந்து மும்பை வந்த அப்பெண், அதன்பிறகு எங்கே செல்வது எனத் தெரியாமல் சத்ரபதி ரயில் நிலையத்தில் சுற்றி வந்துள்ளார். அப்போது அப்பெண்ணை விசாரித்த போலீஸ் ஒருவர், அவருக்கு பாதுகாப்பான இடத்தை தங்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பாலியல் தொழில் புரியும் கும்பலிடம் அப்பெண்ணை இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனால், அப்பெண் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப் பட்டுள்ளார். சில ஆண்டுகளாக பாலியல் தொழிலில் சித்ரவதை அனுபவித்த அப்பெண், தனது முதலாளியை ஏமாற்றி அங்கிருந்து தப்பினார். தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்தபடி பாந்த்ரா பகுதியில் தங்கியிருந்த அப்பெண், உடன் வேலை செய்யும் இளைஞர் ஒருவரை காதலித்து மணந்தார். ஒரு ஆண் குழந்தைக்கு தாயான நிலையில், அந்த இளைஞரும் அப்பெண்ணை விட்டுச் சென்று விட மீண்டும் பாலியல் தொழிலுக்கு திரும்பும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார் அப்பெண். இந்நிலையில், சமீபத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது கைது செய்த போலீசாரில், தன்னை பாலியல் தொழிலில் தள்ளிய போலீஸ்காரரும் இருப்பது கண்டு அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.
அப்போலீஸ்காரரும் இவரை அடையாளம் கண்டு கொள்ளவே, தொடர்ந்து அவரை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து வந்துள்ளார். தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் விபச்சார வழக்கில் கைது செய்து விடுவேன் என்று போலீஸ்காரர் மிரட்டியதால், அப்பெண் ஆத்திரமடைந்தார். தன் வாழ்க்கையை சீரழித்த அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த மாதம் 12ம் தேதி அப்போலீஸ்காரரை தனது குடிசைக்கு வரவழைத்து அதிக மது குடிக்க வைத்துள்ளார். போதையால் மயங்கிய நிலையில் கிடந்த போலீஸ்காரரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின் தோழி வீட்டிற்கு தப்பிச் சென்ற அப்பெண், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்ற போலீஸ்காரர்களை எச்சரிக்கும் வகையில் மீண்டும் வீடு திரும்பினார். போலீஸ்காரரின் சடலத்தை பாயில் சுற்றி தீ வைத்தார். பின்னர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மும்பை போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: