ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

பாடசாலை அதிபரின் பேச்சினால் தற்கொலை செய்த மாணவி ஒரு அற்புத நடனக் கலைஞர் ஆவார்.


குருணாகலை சேர்ந்த  பாடசாலை மாணவி  ஒருவரை  தற்கொலைக்கு  இட்டு சென்ற  பேஸ் புக் புகைப்படம் தற்போது வெளியில் தெரிய வந்து உள்ளது.
மாணவி வெனுஷா இமந்தி பண்டார பேஸ் புக்கில் இப்படம் பிரசுரிக்கப்பட்டமையை அடுத்து குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலய அதிபரால் கடுமையாக திட்டப்பட்டு இருக்கின்றார்.
வெனுஷாவுடன் முன்பு காதல் தொடர்பு வைத்திருந்த பையனால் புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருந்தது. ஆயினும் இருவருக்கும் இடையிலான காதல் முடிவுக்கு வந்திருந்த பிற்பாடே புகைப்படத்தை பையன் பதிவேற்றி இருந்தார்.
பாடசாலை அதிபர் சமன் இந்திரரட்ண மாணவியை அழைத்து இப்புகைப்படம் சம்பந்தமாக துஷ்பிரயோக வார்த்தைகளால் நீண்ட நேரம் திட்டி இருக்கின்றார்.
மாணவி கடந்த 05 ஆம் திகதி உயிரை மாய்த்தார். அதிபரின் துஷ்பிரயோக வார்த்தைகள் கலந்த ஏச்சு காரணமாகவே தற்கொலை முடிவை எடுத்தார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து போனார்.
இவர் அற்புதமான திறமைகள் உடைய நடனக் கலைஞர் ஆவார். பாடசாலையை நடனப் போட்டிகள் பலவற்றிலும் முன்னணி வகிக்க செய்து உள்ளார். ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: