ராஜீவ் கொலையாளிகள் மூவரும் குற்றமற்றவர்கள் என்ற ரீதியில் சில அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ராஜீவ் கொலையாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
11 ஆண்டுகாலம் கருணை மனுவை பரிசீலிப்பதற்கு இந்திய ஜனாதிபதி எடுத்துக் கொண்ட அந்த காலம் மிக அதிகம் என கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
மூன்று பேரும் குற்றவாளிகள் அல்ல என்று எவரும் சொல்லவில்லை.
அப்படி ஒரு முயற்சி தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகளால் பேசப்பட்டு வருகிறது.
தடா நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட பிறகு மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இவர்களின் கருணை மனுவே குற்றமற்றவர்கள் என்ற ரீதியில் அல்ல. தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்காக மனு அளித்தார்கள்.
ஆகவே, தமிழகத்தில் இதுபோல பிரச்சாரம் செய்கிற சிலர் தங்களது பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை விவாதமின்றி ஏற்றுக்கொள்வது மரபு. அந்தத் தீர்ப்பிற்கான காரணம் தெரிகிறபோது அதைப் பற்றி கருத்து சொல்லலாம்.
ஆனால், இந்த மூவருக்கும் கண்ணீர் சிந்துகிற, கருணை காட்ட வேண்டுமெனக் கோருகிறவர்கள், அன்றலர்ந்த ரோஜா போன்ற முகமுடைய மிகப் பெரிய தலைவர் ராஜீவ் காந்தி மற்றும் அவரோடு உயிர்நீத்த காவல்துறையினர் உட்பட 18 தமிழர்களின் குடும்பத்திற்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டால், இவர்கள் கருணைக்காக போராடுபவர்கள் என்கிற மன நிம்மதி இருக்கும்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளா 
tamil.thehindu.com/