சனி, 22 பிப்ரவரி, 2014

தில்லியை நோக்கி ராணுவப் படைகள் நகர்ந்த விவகாரத்தில் புதிய சர்ச்சை

தலைநகர் தில்லியை நோக்கி கடந்த 2012ஆம் ஆண்டு ராணுவப் படைகள் நகர்ந்ததற்கு, "இந்திய அரசின் மீது ராணுவத்துக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்' என்று ராணுவ நடவடிக்கைகளின் அப்போதைய தலைமை இயக்குநர் ஏ.கே. சௌத்ரி தற்போது தெரிவித்துள்ள குற்றச்சாட்டால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவரது இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
"தில்லியை நோக்கி ராணுவப் படைகள் நகர்ந்து வருவது அரசுக்கு வருதமளிப்பதால் அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்' என்று அப்போதைய பாதுகாப்புத்துறை செயலர் சசி காந்த் சர்மா, தலைமை இயக்குநர் ஜெனரல் ஏ.கே. சௌத்ரியிடம் கேட்டுக் கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகின. இது குறித்து ஓய்வு பெற்ற ஏ.கே. சௌத்ரி பாட்னாவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

"ராணுவப் படைப் பிரிவுகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டு செல்வது என்பது வழக்கமான நடவடிக்கைதான். சிறிய அளவில் உள்ள ராணுவப் படைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் போது அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
2012ஆம் ஆண்டு குறைவான எண்ணிக்கையிலான வீரர்கள் அடங்கிய 2 ராணுவப் படைகள் தில்லியைக் கடந்து சென்றன. இருந்தாலும், இந்த சம்பவத்தில் அரசு மீது ராணுவத்துக்கு அவநம்பிக்கை அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.
இது தொடர்பாக அரசு சார்பில் என்னிடம் அப்போதே விளக்கம் கேட்ட போது, "இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் செயல். இது குறித்து கவலைப்பட வேண்டாம்' என்று தெளிவுபடுத்திவிட்டேன். அரசும் அப்போது புரிந்து கொண்டது.
ராணுவத்தின் அப்போதைய தலைமைத் தளபதி வி.கே. சிங்குக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைதான் இந்தச் சம்பவத்துக்கு காரணம் என்று வெளியாகும் செய்திகள் குறித்து அவர்களிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்' என்று சௌத்ரி கூறினார்.
மறுப்பு: இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், ""மத்திய அரசு மீது ராணுவத்துக்கு எந்தவித அவநம்பிக்கையும் ஏற்படவில்லை. ராணுவத்துடன் நான் தினந்தோறும் நெருங்கிப் பணியாற்றி வருவதால் இதை நான் உறுதியாக கூற முடியும்'' என்று கூறினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறுகையில், ""இது வழக்கமான நடவடிக்கை என்று ராணுவம் அளித்த அறிக்கையில் தெரிவித்துவிட்டது. அதை நான் நாடாளுமன்றத்திலும் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன்'' என்று கூறினார்.
பின்னணி: ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் வயது தொடர்பான பிரச்னை 2012ஆம் ஆண்டு எழுந்த போது, அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அப்போது, ராணுவப் புரட்சி செய்வதற்காக ஹரியாணா மற்றும் ஆக்ராவில் இருந்த 2 ராணுவப் படைப் பிரிவுகள் தில்லியை நோக்கி கொண்டு வரப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

கவலையளிக்கிறது: பாஜக
"மத்திய அரசு மீது ராணுவத்துக்கு அவநம்பிக்கை ஏற்பட்டதாக வெளியாகும் செய்தி மிகுந்த கவலையளிக்கிறது' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு மீது அனைத்து தரப்பினரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். அது நாட்டை பாதுகாக்கும் ராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ளது என்று கூறும் போது மிகுந்த கவலையளிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தீர்க்கப்படும்' என்று கூறினா dinamani.com

கருத்துகள் இல்லை: