வியாழன், 20 பிப்ரவரி, 2014

கேயார் : வீரம், ஜில்லா ரெண்டுமே மகா நஷ்டம்... பத்துப் பைசா தேறல!- உண்மையை அம்பலப்படுத்திய கேயார்

பெரிய நடிகர்கள் படம்.. வசூல் முன்னே பின்னே இருந்தாலும் ஓஹோன்னு பாராட்டிப் பேசிடலாம்.. எதுக்கு தொல்லை..." -இந்த எண்ணம் சினிமாக்காரர்களுக்கு இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் இருப்பதை என்னவென்பது? சினிமாக்காரர்கள் பெரிய நடிகர்கள் பற்றி என்ன சொன்னாலும் அதை இன்னும் மிகைப்படுத்தி எழுதுவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
விஜய் படம் நண்பன் தொடங்கி, ஜில்லா வரை நூறு கோடி வசூலித்துவிட்டன என கூசாமல் தயாரிப்பு அல்லது நடிகர் தரப்பு சொல்வதை நம்பி அப்படியே எழுதியும் வருகிறார்கள். அதில் உண்மை இருக்கிறதா என குறைந்தபட்சம் யாரும் ஆராயக்கூட முனைவதில்லை.
அஜீத் படத்துக்கும் அப்படித்தான். உலகம் முழுக்க வெறும் 800 அரங்குகளில் வெளியான ஆரம்பம் படம் 132 கோடியை வசூலித்துக் கொட்டிவிட்டதென புள்ளிவிவரம் போட்டிருந்தார்கள்கள் சிலர்.
இப்போது பொங்கலுக்கு வெளியான ஜில்லா, வீரம் படங்கள் விஷயத்திலும் இதுதான் நடந்தது.
இரண்டு படங்களும் முதல் வாரத்திலேயே பெரும் தொகையை வசூலித்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு ஒரு கணக்கைச் சொன்னது. சில ஆர்வக் கோளாறுகள் அவர்களாகவே ஒரு வசூல் கணக்கைக் காட்டியிருந்தனர். எல்லாமே நூறுகோடியை நெருங்கிய கணக்குகள். ஆனால் உண்மையான வசூல் நிலவரம்... மகா நஷ்டம் என்றது.
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தே இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார் சங்கத் தலைவர் கேயார். குக்கூ பட விழாவில் கலந்து கொண்ட கேயார், படங்களின் வசூல் குறித்துப் பேசுகையில், ‘இந்த வருஷம் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கிற மாதிரி வசூல் பண்ணல. லாபம் கொடுத்த ஹிட் படம்னா அது கோலி சோடா மட்டும்தான். பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள்னு சொல்லப்பட்ட எல்லாமே படு பயங்கர நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கு. தயாரிப்பாளருக்கு பத்து பைசா தேறல.. இந்த உண்மையை எங்கே போய் சொல்வது,' என்றா
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியாகி, இரண்டுமே நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது என இதே கேயார் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சில மேடைகளில் பேசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் இத்தனை நாட்களாக இந்த இரு படங்களின் வசூல் குறித்து பொய் தகவல் கொடுத்த தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா சங்கம்... அல்லது, வருமான வரிக்கு பயந்து அவர்கள் காட்டும் நஷ்டக்கணக்கா இது என்ற கேள்விகள் எழுகிறதே கேயார் அவர்களே.. என்ன செய்யப் போகிறீர்கள்?
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: