செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

கிரண்குமார்: இன்று ராஜினாமா- புதுகட்சி துவங்க ஆயத்தம் ! பிரிவோம் சந்திப்போம் விளையாட்டு ?

ஐதராபாத்: தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றிட மத்தியில் ஆளும் காங். அரசு உறுதியுடன் இருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவி்த்து வந்த ஆந்திரா முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து காங்.கட்சியில் இருந்தும் விலகி புதிய கட்சியை துவக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடும் எதிர்ப்பிற்கிடையே ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு உறுதியாக உள்ளது.இதற்கான சட்ட நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. ஆந்திராவை பிரிக்க சீமந்திரா உள்ளிட்டபகுதியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கிரண்குமார் எதிர்ப்பு:ஆந்திராவை பிரிக்க துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவி்த்து வந்த கிரண்குமார் ரெட்டி, இது தொடர்பாக ஆந்திரா மாநில சீர்திருத்த சட்டம் 2013 சட்டசபையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை அவருக்கே திருப்பிஅனுப்பினார்.தன்னால்முடிந்த வரை ஆந்திராவை இரண்டாக பிரிக்க காங்.மேற்கொண்டு வந்த நடவடிக்கைக்கு முட்டுகட்டை போட்டு வந்தார். ஆனால் மத்திய அரசு தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றிட உறுதியாக உள்ளது.இதையடுத்து அதிருப்தியடைந்த கிரண்குமார் ரெட்டி, தெலுங்கானா மாநில உருவாவதற்கு கண்டனம் தெரிவித்து தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. <முன்னதாக நேற்று தலைமை செயலர், காவல்துறை உயரதிகாரிகள் அழைத்து ஆலோசனை நடத்தினார். இன்று தனது பதவியை ராஜினாமா செய்துவி்ட்டு அதற்கான கடிதத்தினை கவர்னரிடம் முறைப்படி சமர்பிக்க உள்ளார்.மேலும் காங்.கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி துவங்க திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் காங்.கட்சியை கைகழுவ கிரண்குமார் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட் dinamalar.com

கருத்துகள் இல்லை: