செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பா.ஜ.,விடம் ராமதாஸ் அடம் ! சமுதாய கூட்டணிக்கும் 'சீட்'

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உடன் இனி கூட்டணி சேர்வதில்லை' என்பதில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் உறுதியாக இருப்பதால், லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., உடன் கூட்டணி அமைப்பதில், அந்தக் கட்சியின், இளைஞர் அணி செயலர், அன்புமணி ஆர்வம் காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான, குரு, 'சமீபத்தில் உருவாக்கப்பட்ட, சமுதாய கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டும்' என, குரல் எழுப்பினார். ஆனாலும், பா.ஜ., தலைவர்கள் விளக்கியதன் அடிப்படையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கூட்டணிக்கு ரகசிய ஒப்புதல் அளித்தார்.அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவது சந்தேகமாகி வருவதால், பா.ம.க.,வும் திடீர் பந்தா காட்ட துவங்கியுள்ளது.பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சேர வேண்டும் எனில், தங்கள் கட்சி சார்பில், ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட, 10 தொகுதிகளையும், தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, கேட்டனர். அதை பரிசீலிப்பதாக, பா.ஜ., தலைவர்கள் உறுதியளித்தனர்.அதேநேரத்தில், சமுதாய கூட்டணி சார்பில் தான், போட்டியிட வேண்டும் என்பதில் குரு உறுதியாக இருக்கிறார். தொலைகாட்சிகளில் பிஜேபிக்கு தமிழகத்தில் 35-40% வாக்குகள் இப்போது மோடி அலை காரணமாக உள்ளது என கூறுகிறார்களே....அப்படியானால் 40 தொகுதிகளிலும் பிஜேபியே தனித்து போட்டியிட்டு அள்ளி செல்ல வேண்டியதுதானே? எதற்கு கூட்டணி?
பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், இதை வலியுறுத்தி பிரசாரமும் செய்து வருகிறார். அதனால், குருவை திருப்திப்படுத்த, புதிய அணுகுமுறையை, ராமதாஸ் கையில் எடுத்துள்ளார்.அதாவது, பா.ஜ., கூட்டணி யில், பா.ம.க.,விற்கு, 10 தொகுதிகளும், சமுதாய கூட்டணிக்கு, நான்கு தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என, அவர் நிர்பந்தம் செய்து வருகிறார். ஆனால், 14 தொகுதிகளை கேட்கும், பா.ம.க.,விற்கு, பா.ஜ., தலைவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இதற்கிடையே, மாவட்ட மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ராமதாஸ் திருவண்ணாமலையிலும், வன்னிய சங்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, குரு கிருஷ்ணகிரியிலும், அன்புமணி சென்னையிலும் உள்ளனர். ஆளுக்கு ஒரு பக்கம் பா.ம.க., தலைவர்கள் இருப்பதால், கூட்டணி முடிவு எடுப்பதில் இழுபறி நிலவுகிறது. இது, பா.ம.க., நிர்வாகிகளை கடும் குழப்பத்தில் ஆழ்த்திஉள்ளது.

- நமது நிருபர் - dinamalar.com 

கருத்துகள் இல்லை: