வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஏழு பேரையும் எம் பி வேட்பாளரா அறிவித்தாலும் ஆச்சரியமில்லை புரட்சி அம்மா ? எதிர்க்கட்சி கூட்டணியை கலைக்க ஜெ., அஸ்திரம்

தி.மு.க., - தே.மு.தி.க.,- காங்., கூட்டணி உருவானால், அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதால், அத்தகைய கூட்டணி உருவாவதை தடுக்க, ராஜிவ் கொலையாளிகள் விடுதலை அஸ்திரத்தை, முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி உள்ளார்.
சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில், முதல்வர் ஜெயலலிதா, உறுதியாக இருப்பார் என்பது, அனைவருடைய நம்பிக்கை. கடந்த காலங்களில், தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகள், விடுதலைப் புலிகளை ஆதரித்தபோது, அவர்களை ஜெயலலிதா, உறுதியாக எதிர்த்தார். இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடையை, நீட்டிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். எண்ணத்தில் மாற்றம்: இலங்கையில் நடந்த போரில், விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பின், ஜெயலலிதாவின் எண்ணங்களில், மாற்றம் ஏற்பட்டது.
இலங்கை தமிழர்களுக்காக போராடியவர்களின், கோரிக்கைகளை ஏற்று, அதன்படி செயல்படத் துவங்கினார். இலங்கைக்கு எதிராக, சட்டசபையில், தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில், பல்வேறு விஷயங்களால் பலவீனப்பட்டுக் கிடக்கும் தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும், வரும் லோக்சபா தேர்தல் வெற்றி என்பது முக்கியமானதாக இருக்கிறது. ஆனாலும், கொள்கை ரீதியாக, எதிர்க்கட்சிகள் அனைத்தும், தனித்து நிற்கின்றன. பா.ஜ.,வும் தனித்து, அணி அமைக்கின்றது. மும்முனை போட்டி ஏற்பட்டால், அனைத்து தொகுதிகளிலும், வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்தார், முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய தே.மு.தி.க., முதலில் பா.ஜ., உடன் சேர முடிவு செய்தது. ஆனால், அக்கட்சியுடன் இணைவதால், அ.தி.மு.க.,வை தோற்கடிப்பது கடினம் என்பதை உணர்ந்து, தி.மு.க.,- காங்., உடன் இணைந்து, தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசிக்க ஆரம்பித்தது. இம்மூன்று கட்சிகளும், கூட்டணி தொடர்பாக பேசிய தகவல், அ.தி.மு.க.,விற்கு அதிர்ச்சியை அளித்தது. தே.மு.தி.க., - தி.மு.க., - காங்., கூட்டணி அமைந்தால், அது பலமான கூட்டணியாக அமையும் என்பதை உணர்ந்த அ.தி.மு.க., அதை எதிர்கொள்வது எப்படி என, ஆலோசித்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் வாய்ப்பு கோர்ட் மூலமாக கிடைத்தது.


அஸ்திரம்:
இதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த அ.தி.மு.க., அவசரமாக அமைச்ச ரவை கூட்டத்தை கூட்டி, ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்ற, ஏழு பேரையும் விடுவிக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர். இதற்கு, காங்., கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., வரவேற்று உள்ளது. இதன் மூலம், இக்கட்சிகள் இடையே, கூட்டணி பேச்சுவார்த்தை தடைபட்டு உள்ளது. இதை எதிர்பார்த்தே, முதல்வர் ஜெயலலிதா, ஏழு பேர் விடுதலை என்ற அஸ்திரத்தை, அவசரமாக ஏவியதாக, அ.தி.மு.க.,வினர் பெருமிதப்படுகின்றனர்.


- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: