வியாழன், 20 பிப்ரவரி, 2014

தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது

தெலங்கானா தனி மாநில மசோதா ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்பாக பேசிய பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, சீமாந்திரா பகுதிக்கு 10 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், சீமாந்திரா பகுதியின் புதிய தலைநகரம் குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதில், சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பான திருத்தத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதன்படி, சீமாந்திரா பகுதிக்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு முன்வந்தது. பின்னர் மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.
சீமாந்திரா பகுதிக்கு 5 வருடங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார். இரு மாநிலங்களுக்கும் 6 அம்ச திட்டங்களை அறிவித்த பிரதமர் மன்மோகன் சிங், விரைவாக தெலங்கானா அமைக்கவும், சீமாந்திரா வளர்ச்சிக்கும் திட்டம் உதவும் என்றார். குறிப்பாக ராயலசீமா, வடகடலோர ஆந்திர மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டம் என்றும், போலாவரம் பாசனத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். nakkheeran.in/

கருத்துகள் இல்லை: