வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

இன்டர்நெட் மூலம் திருட்டு கார் விற்பனை : MBA பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் கைது

திருச்சியில் திருட்டு காரை ஓட்டிவந்த பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 5 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே ஆத்தூர், பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (31). டிராவல்ஸ் அதிபர். இவர் கடந்த 11ம் தேதி காரில் குடும்பத்துடன் திருச்சி வெக்காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தார். காரை கோயில் அருகே நிறுத்தி வைத்து விட்டு சாமிதரிசனம் செய்ய சென்றார். பின்னர் தரிசனம் முடிந்து வந்த போது நிறுத்தி இருந்த கார் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து காரை தேடிவந்தனர். மேலும் இது தொடர் பாக உதவி கமிஷனர் விஜயகுமார் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் எஸ்ஐக்கள் கமலநாதன், செபாஸ்டின், அந்தோணி, தமிழரசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கார் திருடர்களை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை தனிப்படை போலீ சார் வயலூர் மெயின் ரோடு, ராமலிங்கநகர் பிரிவு ரோட்டில் வாகன சோத னை செய்தனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட்டபோது, அது திருட்டு கார் என்பதும், போலி ஆவணங்கள் தயாரித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரனை நடத்தினர். அதில் இருவரும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (24). பிஇ பட்டதாரி, அருண்குமார் (23) எம்பிஏ பட்டதாரி என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந் துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பிடிபட்டது நீலமேகம் கார் என்பது தெரியவந்தது. மேலும் அதே காரை பெரம்பலூரில் விற்பதற்காக கொண்டு சென்றபோது சிக்கி கொண்டனர். அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் கார் திருடர்கள் இல்லை என்றும், திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த மெழுகுவர்த்தி வியாபாரி ராஜா (30) என்பவர் தான் கார்களை திருடி எங்களிடம் தருவார் என்றும், இருவரும் போலி சான்றிதழ் தயாரித்து இன்டர்நெட் மூலம் கார்களை விற்று வந்தோம்.


திருடிய இந்த காரையும் விற்கசென்ற போதுதான் சிக்கியதாக கூறினர். தொடர்ந்து கருமண்டபத்தில் உள்ள ராஜா வின் வீட்டுக்கு சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 4 சொகுசு கார்களை போலீ சார் கைப்பற்றினர். மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, போலி ஆவணம் தயாரித்து கொடு த்தது யார் என தீவிர விசா ரணை நடத்திவருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள ராஜாவை பிடித்து விசாரித்தால், மேலும் பல கார் திருட்டில் தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


திருச்சியில் 5 சொகுசு வாகனங்கள் பறிமுதல்  தொழில் நஷ்டத்தால்சொகுசு கார் திருட்டு. கடந்த சில வருடங்களுக்கு முன் கார் திருடன் ராஜா, திருச்சி பாலக்கரையில் பிரபல மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு தமிழகம் முழுவதும் 41 கிளைகள் இருந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நிறுவனத்தை மூடிவிட்டு கார் திருடி விற்று வந்தார். திருடுவது மட்டும் ராஜாவின் பணி. அவற்றை இன்டர்மூலம் விற்பனை செய்வது முத்துகிருஷ்ணன், அருண்குமார் பணியாகும் என போலீசார் தெரிவித்தனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: