புதன், 21 செப்டம்பர், 2011

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது கற்பூரம் ஏற்றி வழிபாடு ஐயோ சாமி முடியலே


விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள மரவாநத்தம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு சொந்தமான எருமை மாட்டுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்ததாக ஒரு செய்தி பரவியது.
எருமை மாடு எமனின் வாகனம். எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவியது.
இதையடுத்து சின்ன சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்று வீட்டு முன் வெற்றிலை, பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

இதேபோல் திருவெண்ணைநல்லூரில் இன்று காலை வீட்டு முன் தேங்காயில் கற்பூரம் ஏற்றி ஆண்களின் தலையை சுற்றி வீட்டு முன் தேங்காயை போட்டு பெண்கள் உடைத்தனர்.
இதைத் தொடர்ந்து பெரிய செவலை, சரவணப்பாக்கம், கீழ் எடையார், உளுந்தூர்பேட்டை, கெடிலம், திருநாவலூர் ஆகிய பகுதிகளிலும் பெண்கள் சிறப்பு பூஜை செய்து வீதியிலே தேங்காய் உடைத்தார்கள். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 இதனால் இந்திய விரைவில் வல்லரசாகும் என்று நடிகர் விவேக் உட்பட பல மேதாவிகள் நம்புவதாக தெரிகிறது இது பற்றி அன்ன ஹசாரே என்ன சொல்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. அவரது கருத்து அறிந்த பின்பே எதுவும் உறுதியாக கூறமுடியும் என்று பார்பன ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாக தெரிகிறது 

கருத்துகள் இல்லை: