புதன், 21 செப்டம்பர், 2011

நடிகை சோனா:சரண் பகிரங்க மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுகிறேன்


Sona

சென்னை: தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் - தயாரிப்பாளர் பகிரங்க மன்னிப்பு கேட்டால், வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக கவர்ச்சி நடிகை சோனா இன்று கூறினார்.
இந்த விவகாரத்தில் கடந்த இரு தினங்களாக நடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் நேரில் போய் கேட்டுக் கொண்டார் சரணின் தந்தை எஸ்பி பாலசுப்ரமணியன்.
சரணின் நண்பர்களும் சோனாவிடம் இதுகுறித்து வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் எஸ்.பி.பி. சரண் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில், "சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். சினிமாவில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணக்கஷ்டத்தில் உள்ளார். கடனும் இருக்கிறது. என் குடும்ப பின்னணியை மனதில் வைத்து என்னை கவர்ச்சியால் மயக்கி பணம் பறித்து கடன் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டார். அவரை நான் எச்சரித்ததால் என் மேல் பொய் புகார் அளித்துள்ளார்," என்றெல்லாம் கூறியிருந்தது, சோனாவை ஆத்திரப்படுத்திவிட்டதாம்.எஸ்பி பாலசுப்பிரமணியன் சந்திப்பைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் வாங்கத் தயாராக இருந்த அவர், அப்போது சரண் பகிரங்க மன்னிப்பு கேட்காமல் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இது குறித்து சோனா கூறுகையில், "மது விருந்தில் பலர் முன்னிலையில் எஸ்பிபி சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்த எல்லோருக்குமே அது தெரியும். அவர்கள் சாட்சிகள் என்பதால் நடந்த உண்மைகளை வெளியிட வேண்டும். சரணுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தால் அவர்கள் மீதும் வழக்கு தொடருவேன். எஸ்பிபி சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நான் போய் சரணை பாலியல் தொந்தரவு செய்வேனா... இதை யாராவது நம்புகிறீர்களா...

சரண் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்காமல் எந்த சமரசத்துக்கும் நான் தயாராக இல்லை," என்றார்.

எஸ்பிபி சரண் தவறாக நடந்து கொண்டதற்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை சோனா வைத்துள்ளதால், சரணின் தரப்பு பலவீனமாக உள்ளது. எனவே இன்றோ நாளையோ மன்னிப்புப் படலம் அரங்கேறலாம் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: