சனி, 24 செப்டம்பர், 2011

கொழும்பு யாழ்ப்பாணம் தனியார் பஸ்கள் பொலிஸாரினால் முடக்கம் _


வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புறப்படுவதற்கு பயணிகளுடன் தயார் நிலையில் நின்றிருந்த 8 தனியார் பஸ்களை சுற்றிவளைத்த வெள்ளவத்தை பொலிஸார் குறித்த பஸ்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு தடை விதித்துள்ளனர்.
இதனால் பல்வேறு தேவைகளின் நிமித்தம் யாழ். குடாநாட்டில் பல பகுதிகளுக்கு செல்லவிருந்த சுமார் 400 பயணிகள் நிர்க்கதிக்குள்ளாகிய நிலைமை நேற்று இரவு ஏற்பட்டுள்ளது. மேற்படி 8 தனியார் பஸ்களுக்குமான வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமை யே இந்த பஸ்களின் யாழ்ப்பாணத்துக்கான பயணம் முடக்கப்பட்டிருப்பதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. பயணம் முடக்கப்பட்ட 8 பஸ்களும் தற்போது வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க வீதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்படாதபட்சத்தில் எந்தவொரு பஸ்ஸையும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்த இடமளிக்கப்படமாட்டாது என்றும் அத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்களுக்கான வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத உரிமையாளர்கள் இம்மாதம் 30ஆம்திகதிக்கு முன்பதாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் பொலிஸ் தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற தனியார் பஸ்கள் அனைத்தும் வெள்ளவத்தையிலிருந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி முதல் புறக்கோட்டையிலிருந்து புறப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் பொது மக்களுக்கும் பஸ் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டிற்கு செல்வதற்கு தயாராக வந்த மேற்படி பயணிகள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்ற அதேவேளை, அவசரதேவை நிமித்தம் யாழ்ப்பாணம் செல்வோர் மாற்றுவழிகளைத் தேடி அலைந்ததாகவும் வேறு சிலர் சிறுவர்களுடன் தவித்ததாகவும் கிடைத்த தகவல்கள் தெரிவித்த

கருத்துகள் இல்லை: