வியாழன், 21 ஜூலை, 2011

புலிகளிடம் பிள்ளைகளை பிடித்துக் கொடுத்த ஸ்ரீதரனா மக்களை காப்பாற்ற போகிறார்?


மண்ணின் மைந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அப்பாவி சிறார்களை கட்டாயமாக புலிகள் அமைப்பில் இணைப்பதற்கு வழியமைத்துக்கொடுத்த காரணத்தினால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 10வது நிலையில் அதிபராகவிருந்த இவர் உயர்தரப் பாடசாலையின் அதிபராக பதவியுயர்வு பெற்றார் என்று மண்ணின் மைந்தன் என்பவர் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் கிரிக்கட் மட்டை பிடிக்கத்தெரியாத நடேசனின் மகனுக்கு முன்னணி கிரிக்கட் மட்டை பிடிப்பாளர் என பரிசுகொடுத்து காலத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நன்மையடைந்தார்.

உண்மையிலேயே விளையாட்டு மட்டைப்பிடி வீரரான மருதநகர் செல்வக்குழந்தையை இனங்காட்டி புலிகளில் கட்டாயமாக இணைக்க வழியமைத்தவரும் இவர்தான். காலத்துக்குக் காலம் இருக்கும் கட்டடங்களை உடைத்த அவற்றை புதிதாக கட்டுவதாகக் கூறி புலிகளின் துணையுடன் பொதுமக்களின் பணத்தை சூறையாடியவர் இவர்தான் என்றும் மண்ணின் மைந்தன் மேலும் கூறியுள்ளார்.

புதுமாத்தளன் நோக்கி மக்கள் ஓடும்போது செஞ்சிலுவை வாகனத்தில் பெருமளவு பணத்தை வவுனியாவுக்கு எடுத்துச்சென்று உறவினர்களின் பேரில் வங்கியில் பணத்தை வைப்பும் செய்தார். ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குமென இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வழங்கப்பட்ட பலகோடி பணத்தையும் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இவர் புலிகளுக்குத் தாரைவார்த்தும் கொடுத்தார் என்றும் இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழை பிள்ளைகளை வலுக்கட்டாயமாக புதுமாத்தளனில் புலிகள் இழுத்துச்சென்ற போது ஏழை பிள்ளைகளை புலிகளுக்குக் காட்டிக்கொடுத்தமைக்காக கைமாறாக இவரது மனைவியும் பிள்ளைகளும் புதுமாத்தளனில் புலிகளால் கப்பலில் ஏற்றி திருகோணமலைக்கு இவர்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டதாக இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இத்தகைய குணம்படைந்த மனிதரா கிளிநொச்சி மக்களைக் காப்பாற்றப்போகிறார் என்று கேள்வியெழுப்பியிருக்கும் மண்ணின் மைந்தன், இவர் அதிகமாக பிதற்றுவதற்கு தான் ஒரு புலி உறுப்பினராகவிருந்து புனர்வாழ்வு பெறாதது காரணமாக இருக்கலாம் என்றும் மண்ணிந் மைந்தன் கூறுகிறார்.

அரசாங்கத்தின் மீது இவர் சீறிப்பாய்வதற்கு பாராளுமன்ற கதிரை ஏறுமுன் இவர் செய்த மோசடிகளுக்காக விசாரணை செய்யாதிருந்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம். இவ்வாறான பெரும் மோசடி செய்யும் சுயநலவாதியால் கிளிநொச்சி மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா? எனவே கெளரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெறும் அபிவிருத்தியைத் தொடரவிடுவதே நன்மையாக அமையும் என்றும் மண்ணின் மைந்தன் இக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்

கருத்துகள் இல்லை: