நான் ஒரு சாதாரண தொழிலாளிதான். எனது முதலாளியான கலாநிதி மாறன் என்ன செய்யச் சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன் என்று சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாப்பிள்ளை என்ற படத்தை ஹிதேஸ் ஜபக் தயாரித்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது. பெரிய அளவில் விளம்பரமும் செய்தார்கள். ஆனால் படம் ஓடவில்லை. இந்த நிலையில் ஹிதேஸ் ஜபக் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் சக்சேனா தன்னை மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.
இதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்சேனாவை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து போலீஸ் தரப்பு தகவல்கள் கூறுகையில்,
பல சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் குறித்து சக்சேனா வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஒரு சாதாரண தொழிலாளி என்றும், முதலாளியான கலாநிதி மாறன் என்ன செய்யச் சொன்னாரோ அதை மட்டுமே தான் செய்ததாகவும் சக்சேனா கூறியுள்ளார்.
எந்த ஒரு விஷயத்திலும் தன்னிச்சையாக தான் எதையும் செய்யவில்லை. தன்னுடைய மேல் அதிகாரிகள் சொன்னதை தான் தான் செய்ததாகவும் அவர் கூறியுள்ளாராம். இதையடுத்து சக்சேனா சொன்ன தகவல்கள் உண்மைதானா என்பதை அறிய கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தி ஒப்பிட்டுப் பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே அவரை விசாரணைக்கு வருமாறு கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதற்கு அவர் காலஅவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து ஜூலை 29ம் தேதி வரை டைம் கொடுக்கப்பட்டிருப்பது நினைவு கூறத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக