ஹிலரி கிளின்ரனின் சென்னை விஜயம் எதிர்பார்த்தளவு பாதக விளைவுகளை ஏற்படுத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஹிலரி கிளின்ரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததன் பின்னர் கடுமையான அறிக்கைகளை வெளியிடுவார் என எதிர்பார்த்ததாக வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சந்திப்பின் பின்னர் கடுமையான அறிக்கைகள் எதனையும் ஹிலரி வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பார்த்தளவிற்கு கடுமையான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தின் தலைமைத்துவப் பொறுப்பினை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை அமெரிக்கா விரும்புவதாகவும், இதனால் இலங்கை தொடர்பில் இந்தியாவிடம் கடுமையான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பினை புரிந்து கொண்டு அமெரிக்கா செயற்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக