-சுகுனா
உள்ளுராட்சித் தேர்தல்கள் என்றால், வேட்பாளர்களின் திறமைகளை எடுத்துச் சொல்லி, அவர்களால்தான் அந்தந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யமுடியும் என்பதற்கான காரணங்களைக் கூறித்தான் வாக்குக்கேட்பது வழக்கம். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், இனத்தின் துயரங்களையும் இழந்த உயிர்களையும் மீண்டும் முதலிட்டு தமது வெற்றியை புதுப்பிக்க தமிழ்க் கூட்டமைப்பு முயன்றுகொண்டிருக்கின்றது. தாயகத்திலுள்ள தமிழ்மக்கள் விழித்துக்கொண்டுவிட்டதை உணர்ந்துகொண்ட தமிழ்; கூட்டமைப்பினர், இந்த தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிடவேண்டும் என்பதற்காக தம்மாலான அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்பதில் ஆளும்கட்சி தரப்பில் முழுமுயற்சி எடுக்கப்பட்டுவருகின்ற அதேவேளையில், எந்த வகையிலாவது வெற்றிபெற்று மீண்டும் தமது வியாபாரத்தை தொடர தமிழ்க் கூட்டமைப்பும் பகீரதப்பிரயத்தனம் செய்கின்றது. தோல்வி அடையப்போவது உறுதியாகிவிட்டது என்பதை தமிழ்க் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகளே புலப்படுத்துகின்றன
பருத்தித்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, போரில் அரசாங்கத்திற்கு கருணா உதவியதுபோல, தேர்தலில் அரசுக்கு டக்ளஸ் உதவுவதாக கூறியிருக்கிறார்.
இதன்மூலம் யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெற்றதுபோல, தேர்தலிலும் அரசாங்கம் வெல்லும் என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார் மாவை. அவரையறியாமலே அவர் இந்த உண்மையை ஒப்புக்கொண்டிருக்கின்றார்.
தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிடவேண்டும் என்பதற்காக கூட்டமைப்பினர் தற்போது பல்கலைக்கழக மாணவர்களை பலிக்கடாவாக்க துணிந்துவிட்டனர்.
அதனால்தான் இல்லாத மாணவர் ஒன்றியம் ஒன்றின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மாணவர்கள் எல்லாம் தமக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்ட முயன்றனர். அவர்களின் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் எல்லாம் கூட்டமைப்பிற்கு ஆதரவாக மட்டுமே செய்திகள் வெளியிடும். அவர்களுக்கு எதிரானவற்றை மட்டுமல்ல, அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் அவை வெளியிடுவதில்லை. நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது.
தவறான செய்தி ஒன்று வெளிவந்தால் அடுத்த நிமிடமே அது தவறானது என்பதை எடுத்துச்சொல்ல ஊடகங்கள் வந்துவிட்டன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணம், உடனடியாகவே அதனை டான் ரிவி ஊடாக மறுத்துரைத்தார். பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பே இயங்கவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.
இது கூட்டமைப்பினரின் வேலைதான் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
இன்னுமொரு புறம் கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வலிதந்தாரை தோற்கடிப்போம் என்று புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.
தாயகத்திலுள்ள உறவுகளுடன் தொடர்புகொண்டு தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்துமாறு சிறிதரன் தனது வேண்டுகோளில் தெரிவித்திருக்கிறார்.
வலிதந்தாரை தோற்கடிப்போம் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.
தான் பாடசாலை அதிபராக இருந்தபோது தனது பாடசாலையிலிருந்து மாணவர்களை பலவந்தமாக புலிகளுக்கு தாரைவார்த்தவர் இந்த சிறிதரன். தன்னால் ஏற்பட்ட வலியை கிளிநொச்சி மக்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதை அவர் தெரிந்துகொண்டதால் தான், புலம்பெயர்தமிழர்களின் உதவியை நாடியிருக்கிறார்.
அவருடைய இந்த கோரிக்கை மின்அஞ்சல் மூலம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தூள்கிளப்புகின்றது.
அற்ப சலுகைகளுக்காக இனமானத்தை விற்கவேண்டாம். தன்மானமுள்ள தமிழர்களாக நிமிந்து எழுவோம் என்று இந்த மின்அஞ்சல் புலம்பெயர்தமிழர்களை தட்டியெழுப்பியிருக்கின்றது.
அற்ப சலுகைகளுக்காக அல்ல, அடுத்தவேளை உணவிற்காக இளம்விதவைகள் வீதிகளில் நிற்கின்றபோது திரும்பிப் பார்க்காத புலம்பெயர்தமிழர்கள், தமது இருப்பை புலம்பெயர்நாடுகளில் தக்கவைத்துக் கொள்வதற்காக மற்றுமொருமுறை முள்ளிவாய்க்கலுக்கு வழிகாட்டுகின்றார்கள்;.
இவர்களின் இந்த ப+ச்சாண்டிகளையெல்லாம் தாயகத்து தமிழர்கள் இனியும் கவனத்தில் எடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு தேவையானதெல்லாம் தற்போது கிடைத்திருக்கும் நின்மதியான வாழ்வு. மீண்டும் அதேபழைய வாழ்வு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக