வெள்ளி, 22 ஜூலை, 2011

பெண்கள் போராட்டம் நித்தி, ரஞ்சிதா படத்தை செருப்பு துடைப்பத்தால் அடித்து,



சேலம் : சேலத்தில் நேற்று, நித்தி, ரஞ்சிதா படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தினர். சாமியார் நித்யானந்தா படுக்கை அறையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கடந்த குரு பூர்ணிமா தினத்தன்று பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா, ஆண், பெண் பக்தர்களை தனது குண்டலினி சக்தியால் ஆகாயத்தில் மிதக்க வைக்கிறேன் என ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றினார்.

இந்த காட்சி டிவிக்களில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த பல்வேறு பெண்கள் அமைப்பினரும், சமூக அமைப்பினரும் நித்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மாவட்ட பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் நேற்று, நித்தி, ரஞ்சிதாவை கண்டித்து போராட்டம் நடத்தினர். அமைப்பின் மாவட்ட செயலாளர் கந்தம்மாள் தலைமையில் பெண்கள் ஒன்றிணைந்து சேலம் பெரியார் சிலை முன்பு நித்தி, ரஞ்சிதா படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர். அவர்கள், ‘‘மக்களை ஏய்த்து வரும் போலி சாமியார் நித்தியை கைது செய், பெண் பித்தன் நித்தியை சிறையில் தள்ளு, மத்திய, மாநில அரசே, நித்தி ஆசிரமங்களை இழுத்து மூடு, போலி சாமியார் நித்தியின் சொத்துகளை பறிமுதல் செய்’’ என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதையறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம், ஏன் அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்டனர். பின்னர் அவர்களை டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நித்திக்கு எதிராக பெண்கள் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: