நல்லூர் முத்திரைச்சந்திப் பகுதியில் யாழ்ப்பாணத்துக் கடைசி மன்னனான சங்கிலியனின் சிலை ராஜ கம்பீரத்துடன் மீண்டும் அது உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பிரபல சிற்பக் கலைஞரான புருஷோத்தமனின் கைவண்ணத்தில் உயிர்பெற்றுவரும் சங்கிலியன் சிலையின் சிற்ப வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டள்ளது.
சங்கிலியன் சிலையை அகற்றிவிட்டு கே.பி.யின் சிலையை வைக்கப்போகிறீர்களா என்று, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கேள்வியெழுப்பியிருந்தார்.
எனினும், சங்கிலியன் சிலை நொருக்கப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று மறுத்துக் கூறிய மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, சங்கிலியன் சிலை உருக்குலைந்த நிலையிலிருந்ததால், அது புதிதாக வடிவமைக்கப்பட்டு நல்லூர் திருவிழாவின் போது திறக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக