சனி, 23 ஜூலை, 2011

ஸ்டாலின் அழகிரிக்கு இடையே பிணக்கு இல்லை,T.R பாலு சொல்கிறார்


கோவையில் இன்று திமுக செயற்குழு கூட்டம் மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. நாளை பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க., தலைவர் கலைஞர் கோவை வந்து ஓட்டலில் தங்கியுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்த மத்திய அமைச்சர் அழகிரி மதுரை மாவட்ட செயலாளர் மூர்த்தி, தேனி மாவட்ட செயலாளர் மூக்கையா உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் காலை 11 மணியளவில் கலைஞர் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின் - மு.க. அழகிரிக்கு
இடையே போட்டி இல்லை : டி.ஆர்.பாலு
மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி விவகாரம் குறித்து டி.ஆர்.பாலு இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அவர்,’ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையே பிணக்கு என்றும் போட்டி என்றும் மீடியாக்களில்தான் செய்திகளும் கட்டுரைகளும் வருகின்றன; அவையே ஊதிப் பெரிதாக்குகின்றன’’ என்று கூறியுள்ளார்.
மேலும், திமுக., காங்கிரஸுக்கு இடையிலான உறவு சுமுகமாக இருப்பதாகவும், இது குறித்த விவாதம் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் நடக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக தரப்புக்காக மத்திய அமைச்சரவையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, அமைச்சரவை இடங்கள் குறித்தும் இன்றைய செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இல்லை பாலு சொல்கிறார் 
திமுகவுக்கு எதோ போதாத காலமாகத்தான் தோன்றுகிறது. இருவரும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் ஆக இருக்கிறார்கள். திமுக தனது தொடங்கிய இடத்தை மறந்தால் இது தவிர்க்க முடியாதுதான். சுயமரியாதை இயக்கம் என்ற தனது அடிப்படை கொள்கையை எவர் உண்மையிலேயே மனதில் கொண்டு அரசிய நடாத்துவாரோ அவருக்கே திமுகவின் பாரம்பரிய தளம் கைவசப்படும். அஞ்சாநெஞ்சன் உண்மையிலேயே அஞ்சா நெஞ்சந்தானா என்று நிரூபிக்க நேரம் அண்மித்து கொண்டு இருப்பதாக தெரிகிறது 

கருத்துகள் இல்லை: