லண்டன், ஜூலை 22: பிரிட்டிஷ் இளவரசி டயானா மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் உயரதிகாரிகள் இருவர், டயானா மரணம் தொடர்பான சில முக்கிய ஆதாரங்களை வெளியிடாமல் மறைத்து வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து டயானா வழக்கை மீண்டும் விசாரிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. முன்னதாக 1997-ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தனது நண்பர் டோடி அல் ஃபையதுடன் காரில் சென்ற டயானா விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான ஆவணங்கள் சில, நீதிமன்றத்துக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் முன்னாள் தலைவர் லார்டு கான்டன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சர் டேவிட் வீனஸ் ஆகியோர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவுள்ளனர். வழக்கின் முக்கிய ஆதாரங்களை இவர்கள் நீதிமன்றத்துக்குத் தெரியாமல் மறைத்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டார் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக