கடந்த 60 ஆண்டுகளில் ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களை எந்த அரசுகளோ சிங்களத்தலைமைகளோ வெற்றிகொள்ளவில்லை என்பது வரலாறு. இந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ் மக்கள் அரசுக்கும் சிங்களத் தலைமைகளுக்கும் அந்தப் பாடத்தைப் புகட்டவேண்டும். இந்தப் பாடத்தின் மூலம் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற திடசங்கற்பம் கொண்டுள்ளார்கள் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நிரூபிக்கவேண்டும்.
மேலும்
மேலும்
தமிழ் மக்களுக்கு லாலி பாப் கொடுக்கும்
இந்த மாவை காலம்சென்ற அமிர்தலிங்கம் வகையறாக்களின் வசனங்களையே மீண்டும் மீண்டும் நவிலுகிறார்
சர்வதேச நகர்வுகள் போன்ற சொற்களை உபயோகித்து பாமர மக்களின் மேல் மிளகாய் அரைக்கிறார்கள்.
அரசுக்கு எதோ முழு உலகமும் நெருக்கடி கொடுப்பது போலவும் அதன் மூலம் தம்முடன் அரசு பேசி காலாகாலமாக தாம் கேட்டு வரும் இல்லாத ஊருக்கு போகும் வழியை தங்கத்தாம்பாளத்தில் தந்து விடும் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள்.
புலன்பெயர்களும் இந்த கூத்தமைப்பும் இவர்கள் கூறும் சர்வதேசமும் சேர்ந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே அது ஏன் என்று இன்னும் சிந்திக்க திராணி இல்லாதவர்களை என்னவென்று சொல்வது?
பயங்கரவாதிகள் என்ற பெயரை சந்தேகத்திற்கு இடம் இன்றி பெற்றுவிட்ட ஒரு குழுவுக்கு உலகில் என்ன அந்தஸ்து கிடைக்கும் என்று ஏன்தான் இன்னும் புரியவில்லை?
அவர்களின் ப்ளாஷ் பாக்குகளையே நினைத்து நினைத்து உரலை இடிக்காமல் சற்று விழித்து எழுமின் மக்களே.
ஏமாறுவோர் இருக்கும் வரை எமாற்றுவோரும் இருந்தே தீருவார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக