மற்றுமொரு முறை துள்ளுவதற்கு சந்தர்ப்பம்: அவ்வளவுதான்!
-சுகுனா
தமிழகத்திற்கு விஜயம்செய்திருந்த அமெரி;க்க ராஜாங்க செயலாளர் ஹில்லரி கிளின்டன் ஜெயலலிதாவைச் சந்தித்தது தொடர்பாக புலம்பெயர் இணையத்தளங்கள் துள்ளிக்குதிக்கின்றன. ஒருமணிநேரம் இருவரும் பேசிய விடங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அச்சமடைந்திருப்பதாக வேறு தெரிவித்திருக்கின்றன.
இவையெல்லாம் நிச்சயம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உற்சாகமூட்டி உரமேற்றப்போவது என்னவோ உண்மைதான். ஆனால்- ஜெயலலிதா- ஹில்லரியின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இலங்கை விவகாரம் பற்றி வாய்திறக்கப்படவில்லை.
யுத்தத்தின் பின்னர் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் மீள்குடியேறற்றம் குறித்து ஜெயலலிதா வலியுறுத்தியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், ஹில்லரி சந்தித்த சில மணிநேரங்களில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் மீள்குடியேற்ற விடயத்தில் அரசாங்கத்தின் சாதனையை பாராட்டியிருக்கிறார்.
ஆக, ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா தனது கொழும்பு தூதுவர் மூலம் பதிலளித்திருக்கின்றது.
ஜே-ஹில்லரி சந்திப்பு தொடர்பாக தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினமணி வெளியிட்ட செய்தியில் இருவரும் பேசிய விடயங்கள் என்ன என்பதுகுறித்து விபரித்திருக்கின்றது.
அந்தச் செய்தியை அப்படியே கீழே தருகின்றோம்.
வாகன உற்பத்தித் தொழிலில் தமிழகம் முன்னிலை பெற்று விளங்குவதாகவும், இந்தத் தொழிலில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் முதல்வர் விளக்கினார். அந்த வாய்ப்புகளை மேலும் பெருக்கிட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நடுத்தர நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை அழைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது என்று அவர் எடுத்துரைத்தார்.
மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகிறது எனவும், வாகன உற்பத்தித் துறையில் உலகளாவிய நிறுவனங்களைப் பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் அந்தத் துறையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஹிலாரியிடம் விளக்கிக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் குறித்த தனது கருத்தை முதல்வரிடம் பகிர்ந்து கொண்டார் ஹிலாரி.
சூரிய மின் சக்தித் திட்டம்: தமிழகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
மாநிலத்தில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 10 பூங்காக்களை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு 9 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் முதல்வர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2011 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே 10 முதல் 12 மில்லியன் அளவுக்கு வேலைவாய்ப்புகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறிய ஜெயலலிதா, தரமான கல்வி நிறுவனங்களும், வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கும் அமைப்புகளும் நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழக அரசும், அமெரிக்காவும் இணைந்தால் சிறந்த தொழில் பயிற்சியை அளிக்கலாம் என்றார் முதல்வர். இதற்கு பதிலளித்த ஹிலாரி, பயிற்சித் திட்டங்களை இரு தரப்பும் பரிமாறிக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
சாலை மேம்பாட்டு வசதி: சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.1 லட்சம் கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த வேண்டும் எனவும், இதற்கு 15 முதல் 20 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் எனவும், ஏராளமான தொழிற்சாலைகளை தென் மாவட்டங்களிலும் அதன் உட்புறப் பகுதிகளிலும் தொடங்க அரசு ஆர்வத்துடன் இருப்பதாகவும், இதற்கு சரியான சாலை கட்டமைப்பு வசதி தேவை எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் ஏராளமான முதலீடுகளைச் செய்ய வாய்ப்பு இருப்பதாக ஹிலாரி தெரிவித்தார். இந்தச் சந்திப்பு 45 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.
அதுதான் தினமணிச் செய்தி.
புலம்பெயர் தமிழர்களெ, ஜெ- ஹில்லரி சந்திப்பை நினைத்து இன்னும் கொஞ:ச நாட்களுக்கு துள்ளிக் குதியுங்கள்.
இன்னுமொரு இதுnபுhன்ற செய்தி கிடைக்கும் வரை….
இன்னுமொரு இதுnபுhன்ற செய்தி கிடைக்கும் வரை….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக