யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் மக்களை அழியவிட்டு ஓடிப்போனவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்று தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகரசபை மைதானத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வீர வசனங்கள் பேசி தமிழ் மக்களின் வாக்குளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த மண்ணில் காணமுடியாது எனவும் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, யுத்தம் செய்தபோது வெளிநாடுகளில் பிள்ளைகளை உயர்கல்வி கற்கவைத்து தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியே கனவு கண்டவர்கள் கூட்டமைப்பினர் என்றும், தமக்குத் தேவையான வசதிகளை பின்வாசல் வழியாக வந்து செய்துகொண்டு போகின்றமை அவர்களது சுயநலப் போக்கை காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உணவு, உடையின்றி ஓடிவந்த மக்களுக்கு உடனடியாக அவற்றை வழங்கி பாதுகாப்பாக அழைத்து வருமாறு தெரிவித்தவர் ஜனாதிபதி எனவும், தமிழ் மக்களின் அழிவுக்கு கூட்டமைப்பினரே மூலகாரணம் என்பதை மக்கள் இன்று உணர்ந்துவிட்டனர் எனவும் அவர் மேலும் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக