பயங்கரவாதத்துக் கெதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் வெற்றி பெற்ற நாளாக பிரபாகரனை கொன்ற மே பதினெட்டாம் திகதியை இலங்கை அரச படைகளின் வெற்றி நாளாக பிரகடனப்படுத்தினார்கள் , ஏனெனில் அன்றுதான் புலிப்பயங்கரவாததுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் அல்லது அதற்கு சற்று முன்பாகவும் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அழைப்பையும் மீறி புலிகளுடன் இழுத்து செல்லப்பட்ட மக்கள் இறுதியில் பரிதாபகரமாக தங்களின் உயிர்களை அவயங்களை இழந்து போன துயரமான மாதமாக மே மாதம் திகழ்கிறது. அவ்வாறே இலங்கையின் இறைமையை மீட்க பயங்கரவாத புலிகளுடன் மோதி உயிரிழந்த , அவயமிழந்த இலங்கை இராணுவத்தினரும் அவர்களின் குடும்பங்களும் அந்த மாதத்தின் துயர இழப்புக்களை சந்தித்தவர்கள். பிரபாகரனும் அவரின் முக்கிய தலைவர்களும் அழிக்கப்பட்டு புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக தோல்வியுற்றதால் இலங்கை மக்கள் மீண்டும் சுதந்திரம் அடைந்ததாக கருதி சகல மக்களும் கடந்த மூன்று தசாப்பதங்களாக அனுபவித்த துயரங்களுக்கு முடிவு காணப்பட்டதாக இந்த மே பதினெட்டை ஒரு வெற்றி நாளாகவே கொண்டாடினார்கள். இப்போது பிரபாகரன் உயிரிழந்ததை வெளியே சொல்ல முடியாமல் விழுங்கி கொண்டு புலிகள் அந்த யுத்தத்தில் செய்த மனித படுகொலைகளை மனச்சாட்சியற்று மறைத்துக்கொண்டு புலிகளின் தாகத்தை தமது (தமிழரின்) தாகமாக வரித்துக் கொண்டு மீண்டும் மிடுக்குடன் மேற்குலக நாடுகளின் நகரங்களை புலம் பெயர் புலிகள் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிரார்கள். ஆக இந்த நேரத்தில் இவர்களின் பயணத்துக்கு பக்க பலமாக இருப்பது ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் மேற்குலக நாடுகளிலுள்ள அரசியல்வாதிகள் சிலரும்.மேற்குலக நாடுகளின் இராக் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் மீதான மனித உரிமை மீறல்களை கண்டிக்க திராணியில்லாத மனித உரிமை நிறுவனங்களும்தான் .
இந்த நாளில் இன்று மேற்குலக நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று தமது குடும்பங்களை சுக போக வாழ்கையில் வாழவைத்துக் கொண்டு இலங்கையில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு அங்கு பல ஆயிரக்கணக்கான சிறார்களை புலிப் பயங்கரவாதிகளாக்கி அழித்தொழித்த இந்த புலம் பெயர் தமிழீழ கனவு காணும் கனவான்களின் மனச்சாட்சியற்ற நேர்மையற்ற சாட்சியமாக திகழும் நூற்றுக்கணக்கான இளமையும் இனிமையும் இழந்துபோன புலி சிறார்கள் சிலரின் முகங்களை உங்களின் பார்வைக்கு வைப்பதுடன் புலிகள் தமது படைகளில் சேர்த்த ஆயிரக்கணக்கான சிறார்களை மறைத்த மறுத்த அதற்கு நிதி உதவியளித்த சகலரும் தமது இறுதிக்காலத்தில் கழிவிரக்கம் கொள்வார்களா என்று பார்த்தால் பாதர் இம்மானுவேல் , முதியவர் உயிரோடை வானொலி தாசீசியஸ் , தீபம் காணொளி நிகழ்சிகளில் இனவாதம் கக்கும் முதியவர் ஜெயசிங்கம் கலாநிதி வசந்தகுமார் என சகலரும் இறுதிவரை இனவாதிகளாகவே திகழ்வார்கள் என்பது மாத்திரம் துல்லியமாக தெரிகிறது. அங்கே, சின்னம் சிறுசுகளை வஞ்சமூட்டி அழித்த இந்த வகையறாக்கள்இங்கு வாழும் சிறார்களுக்கும் நஞ்சூட்டும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக