சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவர் முதல்வர் பதவியேற்றுக் கொண்டதும் முதலில் கையெழுத்திட இருப்பது இலவச மிக்சி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆகும். அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் இலவச மிக்சி, மின்விசிறி, என பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் முதலில் இலவச மிக்சி வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று கையெழுத்திடுகிறார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த ஜெயலலிதா : தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 18 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக