சமைக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளிச் சாறில் காணப்படும் இரசாயனம் இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு பொதுவாக statins மருந்து வகைகள் சிபார்சு செய்யப்படுகின்றன.
இந்த மருந்துகளில் காணப்படும் இரத்தக் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு இரசாயனத்தை போலவே சமைக்கப்பட்ட தக்காளியும், தக்காளிச் சாறும் பயன் தரக் கூடியவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே இதயத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை.
இத்தகைய நோயாளிகள் தினசரி இரண்டு அவுன்ஸ் தக்காளிச் சட்னி அல்லது ஒரு பைன்ட் தக்காளிச் சாறை உட்கொள்வதன் மூலம் பெரும் பயனை அடைய முடியும்.
நன்கு பழுத்த தக்காளியில் சிவப்பு நிற பளபளப்பு ஏற்படக் காரணமாக இருப்பது அதில் பொதிந்துள்ள lycopene என்ற இரசாயனமாகும். இந்த சக்தி மிக்க இரசாயனம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.
அத்தோடு மாரடைப்பு பக்கவாதம் என்பனவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lycopene என்ற இந்த இரசாயனம் பற்றி நடத்தப்பட்டுள்ள 14 சர்வதேச ஆய்வுகளை கடந்த 55 வருடங்களாக நன்கு ஆராய்ந்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடம்பிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலுக்கு இது இயற்கையான பாதுகாப்பை வழங்கக் கூடியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.
பிரிட்டனில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலஸ்ட்ரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு statins மருந்து வகைகளே வழங்கப்படுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக