முந்தைய திமுக அரசு மாணவர்கள் நலன் கருதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் புதிய புத்தகங்கள் கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்துடன் பலகோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
திமுக அரசு கடந்த ஆண்டு 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இணையதளங்களிலும் புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் திடீரென சில பகுதிகளில் சமச்சீர் கல்வி புத்தக விநியோகத்தை நிறுத்துமாறு அரசிடமிருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் செம்மொழி மாநாடு மற்றும் முதல் அமைச்சராக இருந்த கலைஞரின் வாழ்க்கை வரலாறு ஆகியவை இருப்பதால், இதை நீக்குவதற்கு உத்தவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை அழிக்கவும் உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதிய புத்தகங்கள் கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பல லட்ச ரூபாய் செலவழித்து தமிழக அரசு தயாரித்த புத்தகங்கள் அழிக்கப்படுவதால் அரசுப் பணம் வீணக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக