சனி, 21 மே, 2011

சிங்கப்பூர் துணை பிரதமராக தமிழரான தர்மன் சண்முகரட்ணம் தேர்வு

இலங்கையின் யாழ்ப்பாணத்து வம்சாவளித் தமிழரான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பவர் தர்மன் சண்முகரட்ணம். தர்மன் சண்முகரட்ணம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவரது மூதாதையர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தர்மன் சண்முகரட்ணத்தின் அப்பப்பா ஊரெழு கிராமத்தைச் சேர்ந்தவர்.

சிங்கப்பூரில், கடந்த 2001 ஆம் ஆண்டு தொடக்கம் முழு நேர அரசியல் ஈடுபட்ட இவர் ஏராளமான அமைச்சுப் பதவிகளை வகித்து வந்துள்ளார்.

மேலும், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நிதி அமைச்சராக உள்ளார். நேற்று முன் தினம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது இவரது நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை.

இவர் 2005 ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து இருந்தார். இவர் ஒரு பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English summary
Dharmam Sanmugarathnam has been appointed as the deputy prime minister of Singapore on May 18th.

கருத்துகள் இல்லை: