அரசாங்க சமாதான செயலகத்தின் பிரதித் தலைவர் கேதீஸ்வரன் லோகநாதனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் மூதூரில் யுத்தத்தின்போது கொல்லப்பட்டதாக கல்கிஸை நீதவான் நீதிமன்றில் பயங்கரவாத புலனாய்வுப் பணியகத்தினால் (ரி.ஐ.டி.) இன்று தெரிவிக்கப்பட்டது. கேதீஸ்வரன் லோகநாதன் 12.08.2006 ஆம் திகதி தெஹிவளையிலுள்ள அவரின் வீட்டில் வைத்து சுடப்பட்டார். எல்.ரி.ரி.ஈ. பிஸ்டல் குழுவைச் சேர்ந்த மோகனதாஸ் திவாகரன் எனும்மேற்படி சந்தேக நபர் மூதூரில் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் கல்கிஸை பிரதான நீதவான் திருமதி நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் சமர்ப்பித்த மனுவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைதுசெய்வதற்கு மேற்கொண்ட விசாரணையின்போதே இது தெரிய வந்ததாக பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக