சனி, 21 மே, 2011

நெடியவனை ஒப்படைக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை

கொழும்பு, மே.21: கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் நெடியவனை ஒப்படைக்க வேண்டும் என்று நார்வே அரசிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை இணையதளங்கள் இதைத் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவன் கடந்த இருபதாம் தேத நார்வேயில் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தது தொடர்பான விசாரணைகள் அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நார்வேயிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இலங்கையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர் என்று அரசு சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் நெடியவன் கைது செய்யப்பட்டது தொடர்பான அனைத்து விபரங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறும் இலங்கை அரசு நார்வேயிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: