யாழ்ப்பாணத்துக்கும், கண்டிக்கும் இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்ஸில் பெண்ணின் தங்கச்சங்கிலி களவாடப்பட்டது. சாரதி, நடத்துநரின் புத்திசாதுரியத்தால் சில மணித்தியாலங்களில் அது மீட்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: நேற்றுக்காலை 6.15 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இயக்கச்சிப் பகுதியில் நான்கு பெண்கள் பஸ்ஸை மறித்து ஏறியுள்ளனர். குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் அந்த நான்கு பேரும் இறங்கிவிட்டனர். சற்று நேரத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணொருவர் தனது சங்கிலியைக் காணவில்லையென்று அலறினார். இயக்கச்சியில் ஏறிய பெண்கள் மீது சந்தேகம் கொண்ட சாரதி பஸ்ஸை திருப்பி அவர்கள் இறங்கிய இடத்தை நோக்கிச் செலுத்தினார். அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி நோக்கி வந்துகொண்டிருந்த பஸ்ஸில் அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தததை அவதானித்தார். சாரதியும் நடத்துநரும் பஸ்ஸை மறித்து குறித்த நான்கு பெண்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது அதில் இரண்டுபேர் ஓடி விட்டதாகவும் ஏனையோர் பஸ்ஸுக்குள் இருந்து எடுத்ததாகக் கூறி அந்தச் சங்கிலியை ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக