புதன், 18 மே, 2011

தவறுகளை சுட்டிக் காட்டுவோம்: வைகோ ஆவேசம்

ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. மாவட்டச் செயலர்கள் சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட மாவட்டச் செயலர்களில் மணச்சநல்லூர் நடராஜன் மட்டுமே ஆவேசமாக பேசினார். அவர் பேசும் போது, "பொடாவில் கைது செய்யப்பட்டு தியாகிகளானோம். தேர்தலை புறக்கணித்ததன் மூலம், 15 எம்.எல். ஏ.,க்களை இழந்து, தியாகிகளாகி உள்ளோம். மற்ற கட்சிகளில் ஒன்றிய செயலர், நகர செயலர் போன்றவர்கள் தான் புதிய உறுப்பினர்களை சேர்ப்பார்கள். ஆனால், நமது கட்சியில் மாவட்டச் செயலர்களே பொறுப்பேற்க வேண்டியதுள்ளது. தற்போது தொண்டர்கள் சோர்வாக உள்ளனர். அவர்களிடம் 500 ரூபாய் பெற்று ஆயுள் உறுப்பினர்களாக சேர்ப்பது கூட கடினமான காரியம்' என்றார். மற்றொரு மாநில நிர்வாகி பேசும் போது, "வரும் பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பா.ஜ., வெற்றி பெறும். அப்போது நாம் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என்றார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: தேர்தல் முடிவு எதிர்பார்க்காத ஒன்று தான். தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நடந்த ரகளை பற்றி அனைவருக்கும் தெரியும். நமது கட்சியில் அப்படியொரு வன்முறை சம்பவத்திற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அனைவரது மனதிலும் ஊமை காயம் உள்ளது. ஆனால், அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. கடந்த ஐந்தாண்டு காலமாக தி.மு.க., அரசை கடுமையாக நாம் எதிர்த்தோம். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி நாம் தி.மு.க., தலைவரை விமர்சிக்க வேண்டியது இல்லை. அதேபோல் முதல்வரையும் நாம் விமர்சிக்க வேண்டாம்.

கடந்த ஐந்தாண்டுகளாக நாம், அ.தி.மு.க.,வுக்கு உறுதுணையாக இருந்தோம். முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளனர். நான் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தேன். வீட்டின் வேலைக்கார பெண் தான் அழைப்பிதழை பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க., - அ.தி.மு.க.,வை சரிசமமாக பாவிக்க வேண்டும். ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவரது மகள் படிக்கும் கல்லூரியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். என் பெயரை 80 சதவீதம் மாணவியர் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் என்னை அடுத்த முதல்வராக நினைத்து வெளியே பேச வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலையை பொறுத்து, அப்போது முடிவு எடுக்கலாம். தேர்தல் முடிவை, இணையதளம் மூலம் இளைஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர். நமக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

- நமது சிறப்பு நிருபர் -
kunjumani - Chennai ,இந்தியா
2011-05-18 02:12:39 IST Report Abuse
எப்போ வைகோ ஜேவை விட்டு விலகினாரோ அப்போதே ஜே வுக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது , வைகோ இலங்கை பிரச்சனையில் தலையிடாமல் இருந்திருந்தால் தனி ஈழம் கிடைத்திருக்கும் , வை கோ ஒரு நடமாடும் தஞ்சாவூர் பெரிய கோயில்
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-05-18 01:36:29 IST Report Abuse
வைகோ அவர்கள் இன்னும் தனி ஆவர்த்தனம் செய்வது என்பது தேவை இல்லாத ஒன்று. அவரது அணுகுமுறையில் நிச்சயம் ஓர் மாற்றம் தேவை. எப்போதும் போராட்டம் போராட்டம் என்று சொல்லி தனது கட்சியினரை அழைப்பதை அவரது தொண்டர்களே விரைவில் நிராகரிக்கும் போக்கை விரைவில் காணலாம். வரலாற்று பிழை செய்துவிட்டார். இனியும் அவர் அம்மாவின் ஆட்சியை எதிர்த்து போராட நினைத்து செயல்பட்டால் அவருக்கு மேலும் செல்வாக்கு என்பது இல்லாமல் போகும். உள்ளாட்சி தேர்தல் என்றைக்கு வந்து, இவரும் போட்டியிட்டு..வென்று..ஹ்ம்ம் போட்டியிடக்கூட இவரது தொண்டர்கள் முன்வர மாட்டார்கள். ஆளும் கட்சியான அதிமுக நிச்சயம் உள்ளாட்சி தேர்தலிலும் பட்டய கிளப்பும் என்கிறபோது இவரது கட்சியின் நிலைமை..? வெறும் உரக்க பேசினால்மட்டுமே ஒருவர் சிறந்த அரசியல்வாதியாய் ஆகிவிடமுடியாது. நாஞ்சில் சம்பத் போன்ற அளவிற்கு வைகோ அவர்களும் அப்படியே தன்னை நினைத்துகொள்கின்றார். சுய பரிசோதனை செய்யும் நேரமிது. பலரும் பலவிதமாக விமர்சனம் செய்வதை நம்பி இவர் ஒவ்வோர் முறையும் தவறுக்கு மேல் தவறான முடிவினை எடுத்து இறுதியில் வரலாற்று பிழை செய்துகொண்டே இருக்கின்றார். நல்ல மனிதர் வைகோ..நல்ல முடிவை சிந்தித்து எடுத்தால் நிச்சயம் சிறந்த முறையில் கட்சியை நடத்தலாம்..! சிந்திக்கும் தருணத்தை எப்போதுமே சிதற அடிக்கின்றார். இனியும் தொடருமா?
Sundar - Bangalore,இந்தியா
2011-05-18 01:07:17 IST Report Abuse
வாருங்கள் வைகோ அவர்களே... வந்து இந்த நாட்டை இந்த அம்மாவிடமிருந்து காப்பாற்றுங்கள்...
 

கருத்துகள் இல்லை: