தமிழகத்தில் குறுநில மன்னர்களை போல் பாவித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள் என, முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதே உண்மையான தி.மு.க.,தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினாலும், அதற்கு மேல் முக்கிய காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த சட்ட விரோத செயல்பாடுகளே, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு கடும் எதிர்ப்பை பெற்று தந்தது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, கட்சி நலம் விரும்பும் தொண்டர்கள் கூறியதாவது: தி.மு.க., தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு தான் காரணம் என்று கூறுவது தவறு. இப்பிரச்னைகள் உள்ள சில மாநிலங்களில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. உதாரணத்துக்கு, அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பல இலவசங்களை அள்ளி வழங்கிய தமிழகத்தில் மட்டும் தி.மு.க., ஏன் தோற்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிகளில் குறு நில மன்னர்களாக செயல்பட்டனர். அவர்கள் மன்னர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்திருந்தால் எல்லோரும் வரவேற்றிருப்பர். ஆனால், அவர்கள், உண்மையான கட்சி தொண்டரை அவமதித்தனர். தங்கள் உறவினர்களையும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு புகலிடம் தேடி, நெருங்கி வந்தவர்களையும் வளர்த்து விட்டனர்.
சில குறிப்பிட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர்களிடம், "குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்ய முடியும்' என்று மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் உள்ள மதிப்புமிக்க சொத்துக்களையும், குறைந்த விலையில் தங்களுக்கு விற்க கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மிரட்டினர். இதெல்லாம், தி.மு.க.,வின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்களில் புகுந்து, அனைத்து பணிகளிலும் தலையிட்டனர். எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரிகளை மிரட்டி, ஆட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் போல் காட்டி, அமைச்சர்கள் மூலம் இடம் மாற்றினர்.
பார்லிமென்ட் தேர்தலை போல, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விட முடியும் என்று நினைத்தது தவறு. அத்தேர்தலில், மத்தியில் கிளீன் இமேஜ் பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்க்கு ஆதரவான நிலையை தான் மக்கள் எடுத்திருந்தனர். தற்போது, ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று, காங்கிரஸ் மேல் இருந்த மதிப்பும் மக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனி நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எந்த கட்சியும் தோல்வியடையும் என்ற நிலை உள்ளது.
தற்போது, அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ள ஓட்டுக்கள் அனைத்தும், ஜெயலலிதாவுக்காக விழுந்த ஓட்டுக்கள் அல்ல... தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., இனி மக்களிடையே நல்ல பெயரை பெற வேண்டுமானால், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டே ஓரங்கட்ட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினர், அதிகாரத்தை பயன்படுத்தி, சில குறிப்பிட்ட தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவதை விட்டு, கட்சி பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போது தான், தி.மு.க., மக்களிடையே மீண்டும் எழுச்சி பெறும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, எதிர்கட்சி தலைவராக கூட சட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு யார் காரணம் என்பதை அறிந்திருப்பார். அந்த வகையில் கட்சி தலைவர் என்ற முறையில், நடவடிக்கை எடுத்து, சாமானிய தொண்டர்களுக்கு மதிப்பளித்தால், தி.மு.க.,வுக்கு உயிர் கொடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக