புதன், 7 ஜூலை, 2010

மக்களை சுட்டுள்ளனர்,தப்பித்து வருகின்ற வேளையில் அவர்களோடிருந்த 10 ஆயிரம் பயங்கரவாதிகள்

அரசாங்கம் கடன்களை வாங்குகின்றது  என எதிர்க்கட்சியினர் ஆர்ப்பரிக்கின்றனர்.  வாங்குகின்ற கடனில் 65 வீதமானவை வடக்கு  கிழக்கிலேயே பயன்படுத்தப்படுகின்றது என பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மூன்று இலட்சம் மக்கள் தப்பித்து வருகின்ற வேளையில் அவர்களோடிருந்த 10 ஆயிரம் பயங்கரவாதிகள் மக்களை சுட்டுள்ளனர். எனினும், குறைந்தளவான இழப்புடன் படையினர் மக்களை மீட்டெடுத்தமையை மறக்கமுடியாது என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், புலிகளுடன் பல ஜனாதிபதிகள் யுத்தம் புரிந்தனர். எனினும், வெளிநாடுகளுக்கும்   ஏனைய சக்திகளுக்கும் அடிபணிந்து யுத்ததை  இடைநடுவிலேயே கைவிட்டு விட்டனர் அல்லது வேறு பாதையைத் தேடினர்.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும் அடிபணியாது, பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்து, யுத்தத்தை முடித்தமையினால் நாம் நிம்மதியாக வாழ்கின்றோம்.  பாதுகாப்புச் செயலாளரை குற்றஞ்சாட்டுவதை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது பணி தற்போது இலகுவானதாகத் தெரியலாம். ஆனால், கடந்த காலங்களில் கடினமானது என்பதனை மறந்துவிடக் கூடாது. தன்மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும்,    இரவிரவாக பணியாற்றியதன்  மூலம் நாம் சுதந்திரமாக இன்று வாழ்கின்றோம்.
மூன்று இலட்சம் அகதிகளில் தற்போது 12,643 குடும்பங்கள் மட்டுமே முகாம்களில் இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள்   முன்னெடுக்கப்படுகின்றன.     வடக்கு – கிழக்கை   மேம்படுத்துவதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.
30 வருடங்களாக நிலவிய யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவை மூன்று வாரங்களில் நிவர்த்திக்க முடியாது.   அங்கு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
கடன்கள் வாங்கப்படுவதாக எதிரணியினர் குறை கூறிக்கொண்டிருக்கின்றனர்.   ஆனால், பெறப்படும் கடனில் 65 சதவீதமானவை வடக்கு  கிழக்கு தமிழ் மக்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.
கிழக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தைக் காணமுடியாது.    தேசிய அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டியதில்லை. அதே நிலைமை விரைவில் வடக்கி லும் ஏற்படுத்தப்படும் என்றார்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

பாதுகாப்புச் செயலாளரை குற்றஞ்சாட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது பணி தற்போது இலகுவானதாகத் தெரியலாம். ஆனால், கடந்த காலங்களில் கடினமானது என்பதனை மறந்துவிடக் கூடாது. தன்மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரவிரவாக பணியாற்றியதன் மூலம் நாம் சுதந்திரமாக இன்று வாழ்கின்றோம்.
மூன்று இலட்சம் மக்கள் தப்பித்து வருகின்ற வேளையில் அவர்களோடிருந்த 10 ஆயிரம் பயங்கரவாதிகள் மக்களை சுட்டுள்ளனர். எனினும், குறைந்தளவான இழப்புடன் படையினர் மக்களை மீட்டெடுத்தமையை மறக்கமுடியாது.
புலிகளுடன் பல ஜனாதிபதிகள் யுத்தம் புரிந்தனர். எனினும், வெளிநாடுகளுக்கும் ஏனைய சக்திகளுக்கும் அடிபணிந்து யுத்ததை இடைநடுவிலேயே கைவிட்டு விட்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும் அடிபணியாது, பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்து, யுத்தத்தை முடித்தமையினால் நாம் நிம்மதியாக வாழ்கின்றோம்.